ஆயக்குடி கிராமம் அருள்மிகு சோளீஸ்வரர் திருக்கோயில் திருக் குடமுழுக்கு திருவிழா 03.11.2025 அன்று காலை 6.45 மணி முதல் 7.15 மணிக்குள் திருக் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது.இதன் மொத்த மதிப்பீடு தொகை ரூபாய் 70 லட்சம். பழனி தேவஸ்தானத்தின் கீழ் நடைபெறும் திருக்கோயில்களில் ஒன்றான ஆயக்குடி அருள்மிகு சோளீஸ்வரர் திருக்கோயிலில் இதற்கு முன்பு திருக் குடமுழுக்கு நடைபெற்றதாக எந்த ஆவணச் சான்றும் இல்லை.எனவே, இவ்வாண்டு நடைபெற்ற இவ்விழா அந்தத் திருக்கோயிலின் முதல் முறையான திருக் குடமுழுக்கு விழா ஆகும். மேலும் பழனி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் தற்போதைய அரசு பொறுப்பேற்றது முதல் இன்று வரை நடைபெற்றுள்ள 14-வது திருக்கோவில் திருக் குடமுழுக்கு நிகழ்வாகும்.