துறையூர் நவ-05
திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றியம் கோவிந்தாபுரம் ஊராட்சிக்கு துறையூர் ஆத்தூர் ரோட்டில் உள்ள ஸ்ரீ பாலாஜி திருமண மண்டபத்தில் 04/10/2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்”முகாம் நடைபெற்றது.இம்முகாமினை துறையூர் சட்டமன்ற உறுப்பினர் செ ஸ்டாலின்குமார் துவக்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

இதில் வட்டாட்சியர் சிவக்குமார், முன்னாள் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, ரவிச்சந்திரன்,வட்ட வழங்கல் அலுவலர் முத்து, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஐயப்பன், தேர்தல் வட்டாட்சியர் கோவிந்தராஜ், வீரமச்சான்பட்டி மருத்துவ அலுவலர் செந்தில்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோகிலா, சசிகலா, துரைராஜ், முன்னாள் ஊராட்சி ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ், மத்திய ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, முன்னாள் ஊராட்சி தலைவர் கிருபா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் சரசு, சதீஷ்குமார் மற்றும் நடுவலூர் செல்வகுமார்,காளிப்பட்டி சுப்பிரமணியன்,நகர இளைஞர் அணி வழக்கறிஞர் தமிழ்செல்வன் மற்றும் அரசு துறை அலுவலர்கள்,
ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை கோவிந்தாபுரம் ஊராட்சி செயலர் பாஸ்கர் செய்திருந்தார்.

வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *