தமிழ்நாடு

  • வலங்கைமான் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஆப்சாத்பேகம் தலைமை வகித்தார். பள்ளியின் துணை தலைமை ஆசிரியை லலிதா, ஆசிரியர் பிரதிநிதி சார்லட் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஆசிரியர் பயிற்றுநர்கள் புஷ்பா, எழிலரசி, புனிதா ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி வளர்ச்சி பற்றியும், கூடுதலான மாணவர் சேர்க்கை, கல்வி விழிப்புணர்வு, அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கூடுதலான சிறப்பு திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தனர். மேலும் இக்கூட்டத்தில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் பேசுகையில், பள்ளியின் அடிப்படை வசதிகளான பகல், இரவு பாதுகாவலர்கள், துப்புரவு பணியாளர், கழிப்பறை தூய்மை பணியாளர் ஆகியோரை அரசு பணியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் விடுத்தனர், இதில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் நெடுஞ்செழியன், ஆனந்தி, சுஜாதா, முருகன், சுய உதவி குழு புஷ்பா மற்றும்… Read more: வலங்கைமான் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
  • தரங்கம்பாடியில் சாலை விபத்து தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு
    தரங்கம்பாடி செய்தியாளர் இரா.மோகன் தரங்கம்பாடியில் இருசக்கர வாகன சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சாலை விபத்து தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு:- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் உற்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று கடலூர் மாவட்டம் பஞ்சாங்குப்பத்தை சேர்ந்த முகமது ஷகின் , ஹரி , ஆகாஷ் ஆகிய மூன்று இளைஞர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் (கே டி எம் பைக்) செல்லும் போது தரங்கம்பாடியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் தனது (பேஷன் ப்ரோ) இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக நடைபெற்ற விபத்தில் கீழே விழுந்து கிடந்த மூன்று இளைஞர்கள் மீது அவ்வழியே செங்கற்கள் ஏற்றி சென்ற டிராக்டர் ஏறியதில் மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஸ்ரீதர் என்பவர் நாகப்பட்டினம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.… Read more: தரங்கம்பாடியில் சாலை விபத்து தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு
  • மறைந்த மூதாட்டியின் கண்கள் தானம்
    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தில் ரோட்டுத் தெருவில் வசிக்கும் லேட் திரு சிங்காரவேல் மனைவி திருமதி எஸ். அனுசுயா (வயது 87) இன்று காலை இயற்கை எய்தினார். அன்னாரின் கண்கள் அவரின் விருப்பத்திற்கு ஏற்ப வந்தவாசி மலை நகர அரிமா சங்கத்திற்கு‌ தானமாக வழங்கப்பட்டது. தானமாக பெறப்பட்ட கண்கள் காஞ்சிபுரம் அகர்வால் கண் வங்கிக்கு அளிக்கப்பட்டது. தான நிகழ்வில் மாவட்ட அரிமா சங்க தலைவர் இரா.சரவணன், பொருளாளர் சின்னராஜ், அரிமா பேபி யோகானந்தம், மாவட்ட தலைவர் லயன் சபரிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
  • மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுகம் ஏலம் நடைபெற்றது
    தாராபுரம் தாலுகா செய்தியாளர் பிரபு மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுகம் ஏலம் நடைபெற்றது.. திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 02.05.2024 வியாழக்கிழமை அன்று பருத்திவிற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர் கரூர் திருச்சி திண்டுக்கல் ஈரோடு,கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 649நபர்கள் பருத்தி கொண்டு வந்திருந்தனர். பருத்தியினை கொள்முதல் செய்ய திருப்பூர் திண்டுக்கல் ஈரோடு,சேலம் கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூபாய்.8232ற்கும் குறைந்தபட்சவிலை ரூபாய்.6350ற்கும் சராசரி விலை ரூ 7300ற்கும் விற்பனையானது. பருத்தியின் மொத்த அளவு 7093மூட்டைகள் , குவிண்டால்2239.13மதிப்பு ரூபாய் 163,32,623/- ஏலத்தில் 15வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர் என முதுநிலை செயலாளர்(பொ), திருப்பூர் விற்பனைக்குழு திரு.தர்மராஜ் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்
  • தமிழகத்தில் திமுக ஆட்சியில் சரியான திட்டமிடல் இல்லை மக்களை ஏமாற்றும் ஆட்சியாக உள்ளது-அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன்
    எடப்பாடி பழனிச்சாமி தீயவர் இருக்கும் வரை அதிமுகவிற்கு எந்த பயனுமில்லை தஞ்சை மாவட்டம் கஞ்சனூர் சுக்கிரன் கோயிலில் தனது மனைவியுடன் வழிபாடு நடத்திய பின் அ.ம.மு.க. பொது செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி. தஞ்சை மாவட்டம் அருகே நவகிரக கோயில்களில் ஒன்றான சுக்கிரன் பரிகார ஸ்தலமாகவும் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமானதாகவும் விளங்கும் திருவிடைமருதூர் அருகே கஞ்சனூர் அருள்மிகு கற்பகாம்பாள் அம்பிகை அக்னீஸ்வரர் திருக்கோயிலில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவரது மனைவி அனுராதா மற்றும் துணைப் பொதுச்செயலாளர் ரங்கசாமி ஆகியோருடன்சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். கோயிலில் விளக்கேற்றி விநாயகர், முருகன், சுக்கிரன், அக்னீஸ்வரர், ஹரதத்தருக்கு காட்சியளித்த தெட்சிணாமூர்த்தி, கற்பகாம்பாள், உள்ளிட்ட சன்னதிகள் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்.குரு பெயர்ச்சி அரசியலில் யாருக்கு பெயர்ச்சியாகும் யாருக்கெல்லாம் என்று கேட்டதற்கு நான் ஜோசியம் சொல்ல முடியாது. லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று பிரதமர் நரேந்திரமோடி… Read more: தமிழகத்தில் திமுக ஆட்சியில் சரியான திட்டமிடல் இல்லை மக்களை ஏமாற்றும் ஆட்சியாக உள்ளது-அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன்