திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஒன்றியம், கண்டவராட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று குழந்தைகள் தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி எஸ்எம்சி தலைவர் வீ.கவிதா தலைமை தாங்கினார்,
துணைத் தலைவர் அனிதா முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ப.சக்கரவர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று , மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் துரைராஜன், செல்வகுமார், ரேகா, தினேஷ், ரேவதி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு மற்றும் பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.