கோவை அவினாசி சாலை சுகுணா கல்யாண மண்டபத்தில் வரும் செப்டம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் பெண்கள் மற்றும் பழங்குடியினர் வாழ்வாதாரக் கண்காட்சி நடைபெற உள்ளது.

இதுகுறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், சிவா அறக்கட்டளை தலைவர் சுப்ரமணியன் சிவா மற்றும் பழங்குடியினர் முன்னேற்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிலுவை ஆகியோர் பேசினர்..

பெண்களின் திறமைகள், சாதனைகள் மற்றும் அவர்களின் வாழ்வியல் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் வகையிலும், பெண்களின் தன்னம்பிக்கை மற்றும் பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பழங்குடியின மக்களின் பாரம்பரிய கலை, கைவினைப் பொருட்கள் மற்றும் அவர்கள் தயாரிக்கும் பல்வேறு பொருட்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்குவதே கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும்.

இக்கண்காட்சியில் பெண்கள் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது தயாரிப்புகள் மற்றும் திறமைகளை காட்சிப்படுத்த உள்ளனர்.

பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொண்டனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *