புதுச்சேரி மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின் படி தென்கிழக்கு வங்கக்கடலில் மே 22-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும் இது முதலில் வடகிழக்கு திசையில் நகர்ந்து 2024 மே 24-ம் தேதி வாக்கில் மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என்றும் தெரிய வருகிறது.
இதன் காரணமாக மே 21 மற்றும் 22 ந் தேதிகளில் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடம் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.ஆகவே புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இந்த அறிவிப்பை தவறாது பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
— முகமது இஸ்மாயில், இயக்குநர், புதுச்சேரி மீன்வளத்துறை