மதுரை
மதுரை சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சி கிராமத்தில் உள்ள பழமையான வரலாற்று சிறப்பு மிக்க அகிலாண்டேஸ்வரி உடனாய மூலநாதசுவாமி திருக்கோவிலில் சித்திரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவ வைபவம், பக்தர்கள் முன்னிலையில் சுப்பிரமணியர் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் முன்னதாக மீனாட்சி சுந்தரேசுவரர் உற்சவ மூர்த்திகளை பதினாறு வகை திரவியம் கொண்டு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி அம்மாளுக்கு மாலை மாற்றும் வைபவம் நடந்தது தொடர்ந்து சிவாச்சாரியார்கள் முகேஸ்விஷ்வா,மாப்பிள்ளை சார்பிலும்,அம்மாளுக்கு குமரேஷ் பட்டர் முன்னின்று திருக்கல்யாண வைபவங்களை நடத்தினர் முன்னதாக பெண்கள் மணபெண்ணுக்கு பழங்கள்,பட்டுசேலை,பூமாலை,என மேளதாளத்துடன் சீர்வரிசை கொண்டு வந்தார்கள்,இதையடுத்து மாலை மாற்றியும்,யாகபூஜையில் பூஜிக்க பட்ட திருமாங்கல்யத்தை அம்மாளுக்கு அணிவிக்கும் சம்பிரதாயம் நடந்தது.

இதனை ஏராளமான பெண்கள் கண்டு தரிசனம் செய்து,மாங்கல்ய கயிறு அணிந்தனர்,தொடர்ந்து தீபாராதனையுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க பட்டது இந்நிகழ்ச்சியை கோவில் பட்டர் செந்தில், நாகேஸ்வரன்,விழா பொறுப்பாளர் சங்கரன்,ஏற்பாடுகளை செய்து இருந்தனர்,பின் கல்யாண விருந்தை தொழில் அதிபர் மதுரை ரவி வழங்கினார், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர், இதே போன்று மன்னாடிமங்கலம் கிராமத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரை திருக்கல்யாண உற்சவம் நடந்தது இங்கும் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

தொடர்ந்து கோவில் வளாகத்தில் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் செய்து இருந்தனர், முன்னதாக இத்திருக்கோவில் முன்பு உள்ள இடத்தில் அறநிலையத் துறை சார்பில் கல்யாண மண்டபம் கட்டி தர வேண்டும் என கிராமத்தினர் கோரிக்கையாக ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி அமைச்சர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்து இருந்தார், அதனை விரைந்து கட்டிடம் கட்டி தர வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் வேண்டு கோள் விடுத்தார்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை சோழவந்தான் காடுபட்டி போலீசார்  செய்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *