தென்காசியில் மாற்றுத் திறனாளி களுக்கு சுயம்வர திருவிழா
தென்காசியில் ரோட்டரி கிளப் ஆஃப் குற்றாலம் சாரல், வேலு டிரஸ்ட், தென்காசி மாவட்ட மாற்றுத்திறானிகள் இணைந்து மாற்றுத்திறனாளி களுக்கு சிறப்பு விருந்துடன் மாபெரும் சுயம்வர திருவிழா தென்காசி ரோஸ் மஹாலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி கிளப் ஆஃப் குற்றாலம் சாரல் தலைவரும், வேலு டிரஸ்ட் நிறுவனருமான ரோட்டரியன் முருகன் வேலு தலைமை தாங்கினார்.
முதன்மை விருந்தினராக மேஜர் டோனர் பொறியாளர் முத்தையா பிள்ளை, சிறப்பு விருந்தினர்களாக ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தின் தலைவர் எஸ்.ராமகிருஷ்ணன், அமர்சேவா சங்கத்தின் துணைத்தலைவர் மற்றும் செயலாளர் எஸ்.சங்கரராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கௌரவ விருந்தினர்களாக மாவட்ட செயலாளர் ரோட்டரியன் ஆறுமுகப்பெருமாள், முன்னாள் துணை ஆளுநரும் பிரிமியர் குரூப் சேர்மனுமான ஸ்ரீநாத் ராமன், தென்காசி கிளை இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் வினோத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.செயலாளர் ரோட்டரியன் ரமேஷ் அனைவரை யும் வரவேற்று பேசினார்.
துணை ஆளுநர்கள் ரோட்டரியன் சுப்பாராஜ், சேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இசக்கிமுத்து அனைவருக்கும் நன்றி கூறினார்.