கோவை, துடியலூர் வட்டமலை பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் எஸ்.ஆர்.இ.சி ஸ்பார்க் இன்குபேஷன் ஃபவுண்டேஷன் மையம் திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு எஸ்.என்.ஆர் சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயண சுவாமி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட .எல் ஜி எக்யூப்மென்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ஜெயராம் வரதராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மையத்தினை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசும் போது வித்தியாசமாக சிந்திக்கக்கூடிய, எந்தவொரு பிரச்சினைக்கும் சிறந்த தீர்வை முன்மொழியக்கூடிய எவருக்கும் ஒரு தொழில்முனைவோர் மனநிலை உள்ளது எனவும், அதுவே இன்று அனைத்து களங்களிலும் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும் இந்த இன்குபேஷன் முயற்சியைப் பாராட்டி, நிறுவனத்தையும் மையம் உருவாகுவதற்கு உறுதுணையாக இருந்த அனைவரையும் வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கல்லூரி முதல்வர் அலமேலு,
இந்த இன்குபேஷன் பவுண்டேஷன் மையத்தின் நோக்கம், இந்திய அரசு மற்றும் தமிழக அரசின் ஸ்டார்ட்அப் பணியுடன் இணைந்து புது ஆராய்ச்சி மற்றும் புதிய தொழில் முனைவுக்கான சூழ்நிலை உருவாக்குவதாகும். மேலும் அவற்றை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வழி வகுத்து, தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை ஆலோசனை சேவைகளையும், வழிகாட்டுதல்களையும் காலத்திற்கு ஏற்ப நவீன முறையில் வழங்கும் உட்கட்ட அமைப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *