கோவை மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இதில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், பல்வேறு கட்சியினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மணிப்பூரில் இட ஒதுக்கீடு தொடர்பாக குகி- மெய்ட்டி என்ற இரு பிரிவினர்களுக்கு இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் அரங்கேறின. இதனை தடுக்க அரசும் இராணுவத்தை இறக்கி பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த கலவரத்தில் குகி பிரிவினரின் தேவாலயங்களை மெய்ட்டி மக்கள் குறிவைத்து தாக்கும் சம்பவங்களும் அரங்கேறி உள்ளது. இந்த தாக்குதலில் தற்போது வரை 25க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் மூன்று தேவாலயங்கள் தீவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கோவை உக்கடம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியினர் மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

இதில் எஸ்டிபிஐ கட்சியினர், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினரும் கலந்து கொண்டு மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து அங்கு நிலவும் மத மோதல்களுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதில் பெண்கள் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்துகொண்டவர்கள்
தலைமை: D.சிவக்குமார்,
முன்னிலை
A.முஸ்தபா (மாவட்ட தலைவர்)
V M.அபுதாஹிர்
(மாநில செயற்குழு உறுப்பினர்)
A.அப்துல் கரீம் (மாநில செயலாளர் வர்த்தக அணி).
‌N.ரகுபு நிஸ்தார்
மாநில பொதுச் செயலாளர்
SDTU தொழிற்சங்கம் ,
கு ராமகிருட்டிணன்-
பொதுச்செயலாளர்
தந்தை பெரியார் திராவிட கழகம் ,

சுசி கலையரசன்- கோவை மண்டல தலைவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி ,

தோழர் மு இளவேனில்- மாநிலச் செயலாளர் தமிழ் புலிகள் கட்சி ,

L டேவிட் பர்னபாஸ் ஆயர் தலைவர் , CSI கிறிஸ்து நாதர் ஆலயம் காந்திபுரம்,

கிறிஸ்டி சகாயம்- (மத்திய மாவட்ட செயலாளர் கிறிஸ்தவ நல்லெண்ணெய் இயக்கம்)

ஜோசப்ராஜ்
(மேற்கு மாவட்ட செயலாளர் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம்.)
செய்தி தொடர்பாளர்
மன்சூர்,
K. ஷாஜகான் கோவை தெற்கு தொகுதி செயலாளர் உள்ளிட்ட ஏராளமானனோர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *