நான் 2001-லயே அமைச்சர், எடப்பாடி 2011-லதான் அமைச்சர், அவர் எனக்கு ஜூனியர் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கடுமையாக விமர்சித்துள்ளார். ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரித்து சட்ட விதி திருத்தங்களை ஏற்று தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது எப்போதும் நடப்பது. தேர்தல் ஆணைய முடிவு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது எனச் சொல்லப்பட்டுள்ளது. தீர்ப்பு வந்தால் எல்லாம் மாறும். நான் 2001-லயே அமைச்சர், எடப்பாடி பழனிசாமி 2011-ல் தான் அமைச்சர்; எனக்கு அவர் ஜூனியர் தான். 1984ல் ஜனதா தளம் கட்சிக்கு வேலை பார்த்தவர் எடப்பாடி பழனிசாமி. 1986-ல் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோற்றவர். எடப்பாடி பழனிசாமிக்கு திராவிட வரலாறு தெரியாது. அதிமுக வரலாறு தெரியாது. தமிழ்நாட்டு அரசியலை, இந்திய அரசியலை, உலக அரசியலை என்னோடு விவாதிக்கத் தயாரா என்று கேட்டுச் சொல்லுங்கள்.
அதிமுக நாங்கள் தான். நாங்கள் ஒன்றிணைந்து கட்சியை நடத்துவோம். மீண்டும் அதிமுக ஆட்சி வரவேண்டும் என்பதற்காக நாங்கள் ஒற்றுமையாக இருக்க நினைக்கிறோம். ஆனால், எடப்பாடி பழனிசாமி கட்சி அழிந்தாலும் பரவாயில்லை என சுயலாபத்திற்காக தலைமைப் பதவியில் இருக்க நினைக்கிறார். தேவை என்றால் எடப்பாடி பழனிசாமியை தவிர்த்துவிட்டு நாங்கள் அனைவரும் ஒன்றாகச் செயல்படுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *