நாமக்கல்

நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் என் பி எஸ் என்கின்ற பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்திருந்த முன்னாள் அமைச்சர் பி தங்கமணி செய்தியாளருக்கு பேட்டி அளித்தார் பேட்டியில் அவர் கூறியதாவது

கடந்த 14 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் குடித்து யாரும் உயிரிழக்க வில்லை என கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கொள்கை விளக்க குறிப்பிலேயே தெரிவித்த நிலையில், தற்போது உயர்கல்வி துறை அமைச்சரும் மதுவிலக்கு துறை அமைச்சரும் கடந்த அதிமுக ஆட்சியில் கள்ள சாராயம் குடித்து உயிரிழந்து விட்டதாக முன்னுக்கு முரணாக பேசி வருவதாகவும் அப்போது சட்டமன்ற கூட்டத்தொடரில் கூறியது பொய்யான அறிக்கையா.? என்று கேள்வி எழுப்பினார்

மேலும்
2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட கள்ள சாராயம் குடித்து யாரும் உயிரிழக்க வில்லை, சானிடைசர் குடித்தே உயிரிழந்தனர், மின்வெட்டு வேறு மின்தடை வேறு என அமைச்சர் செந்தில் பாலாஜி புது விளக்கம் அளித்துள்ளார், கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட துணை மின் நிலையங்களை தற்போது திறந்து வைத்து விட்டு தங்களது ஆட்சியில் கொண்டு வந்தது போல் திமுக அமைச்சர்கள் கூறி வருகின்றனர், மின் உற்பத்தியை பெருக்க கடந்த 2 ஆண்டுகளில் எந்த திட்டங்களை கொண்டு வரவில்லை,

நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு தலைவராக உள்ள அதிமுகவை சேர்ந்தவரை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண் தலைவரை கூட்டங்களில் மரியாதை குறைவாக தலைவர் இருக்கையை திமுக துணை தலைவர் அபகரித்து அவமரியாதையாக நடத்துவதாகவும் இதன்மீது மாவட்ட நிர்வாகமும் தமிழக முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *