கோவையில் அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்று பயன்படுத்தும் வகையில் ஏற்படுத்தப்பட்ட இணையவழி கல்வி வானொலியின்(வலையொலி) இரண்டாம் கல்வியாண்டு நிறைவு விழா கோவை ஆவாரம் பாளையம் பகுதியில் உள்ள கோ இந்தியா அரங்கில் நடைபெற்றது.

லையன்ஸ் கிளப் உட்பட பல்வேறு தனியார் அமைப்புகள் நடத்திய நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, மாநகராட்சி கல்வி அலுவலர் மரியசெல்வம்,

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும் மாநகராட்சி கமலாநாதன் நினைவு பள்ளியின் பட்டதாரி ஆசிரியருமான சித்ரா பாலசுப்பிரமணியன், லைன்ஸ் கிளப்பை சேர்ந்த பாலசுப்பிரமணியன், ராம்குமார், ஆசிரியர் மனசு திட்டம் ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார், யுனிவர்சல் அச்சிவர் புக் ஆப் ரெக்கார்ட் பாபு பாலகிருஷ்ணன், ஆசிரியர் கார்த்திக் ராஜா, உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.அரசு பள்ளி மாணவர்களுக்கு வாசிக்கும் திறனை அதிகப்படுத்துதல், ஒப்பித்தல், பாடுதல், போன்றவற்றை வலுப்படுத்தும் முயற்சிக்காக இந்த ஆன்லைன் கல்வி வானொலி துவங்கப்பட்டது. இது www.kalviradio.com என்ற வலையொலி பக்கத்தில் ஒலிப்பரப்படுகிறது.இந்நிகழ்வில் மாணவர்கள் எழுதிய கவிதைகள் அடங்கிய புத்தகமும் வெளியிடப்பட்டது.

மேலும் தேசிய அறிவியல் தினத்தில் இணைய வழியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து இணைய வழி கல்வியில் வானொலி வலையொலி மூலம் 22000 ஆடியோவை மாணவர்களிடமிருந்து சேகரித்து ஒரே நாளில் ஒளிபரப்பப்பட்டது.இதனை பாராட்டும் விதமாக யுனிவர்சல் அச்சிவர்ஸ் புக் ஆப் ரெக்கார்டு உலக சாதனை நிகழ்வு சான்றிதழ் வழங்கியுள்ளது.

மேலும் ஏறப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கீதா வெளியிட்ட NMMS 1000 நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *