வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி 71சதவீதம், +1ல் 64 சதவீதம், +2ல் 64சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் 78பேர் தேர்வு எழுதினார்கள், அதில் தேர்ச்சி பெற்றோர் 55பேர், தேர்ச்சி சதவீதம் 71,இதுகடந்த ஆண்டை விட 25சதவீதம் அதிகம். முதல் இடத்தில் எஸ். ஆதித்யா 434மதிப்பெண்,இரண்டாம் இடத்தில் ராகேஷ் 382 மதிப்பெண்,மூன்றாம் இடத்தில் எஸ். ஸ்ரீ தரா 362 மதிப்பெண் பெற்றனர். +1 தேர்வில் தேர்வு எழுதியவர் 80, தேர்ச்சி பெற்றோர் 51, தேர்ச்சி சதவீதம் 64, இது கடந்த ஆண்டை விட 17 சதவீதம் அதிகம், முதல் இடத்தில் ஜெ. ஜெகதீஷ் 409 மதிப்பெண், இரண்டாம் இடத்தில் வி. திவாகர் 391மதிப்பெண், மூன்றாம் இடத்தில் எம். முகமது சபியுல்லா 390 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

+2 தேர்வில் தேர்வு எழதியோர் 80,தேர்ச்சி பெற்றோர் 51,தேர்ச்சி விகிதம் 64 சதவீதம். இது கடந்த ஆண்டை விட 3சதவீதம் அதிகம். முதல் இடத்தில் எஸ். அரவிந்த் 436மதிப்பெண், இரண்டாம் இடத்தில் பிரபு381 மதிப்பெண், மூன்றாம் இடத்தில் எம். கீர்த்திவாசன் 374 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் தெய்வ. பாஸ்கர், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வம், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் தனித்தமிழ் மாறன், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் சிங்கு
தெரு ராஜேஷ் , பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து இனிப்புகள் வழங்கினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *