ராசிபுரம் அருகேயுள்ள கூனவேலம்பட்டிபுதூர் அரசு உயர்நி்லைப்பள்ளி மாணவி க.ஹரிணி 500-க்கு 482 மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றார்.

மாணவி கா.காவியா 471 மதிப்பெண்களும், மாணவி த.இனிகா 448 மதிப்பெண்களும் பெற்றனர்.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் மா.சரவணன், பள்ளித் தலைமையாசிரியர். லியபெருமாள் உள்ளிட்டோர் பாராட்டினர்.
கூனவேலம்பட்டி புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றதற்கும் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரிய ஆசிரியைகளுக்கு பாராட்டு விழா பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மா. சரவணன் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் கலியபெருமாள் அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவப்படுத்தப்பட்டது. மற்றும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி ஹரிணி 482 மதிப்பெண் அவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதிக மதிப்பெண் பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் பூபதி முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் மணிவண்ணன், மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *