வீரவநல்லூர் வாசகர் வட்டம் சார்பில் உழைப்பாளர் தினம், கோடைகால மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி, +2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா வீரவநல்லூர் நூலகத்தில் வைத்து வாசகர் வட்ட தலைவர் ஆதம் இலியாஸ் தலைமையில் இணைச் செயலாளர் சு.கிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.

உழைப்பாளர் தினம் குறித்து கோமதிநாயகம் சிறப்புரையாற்றினார். யோகா மாஸ்டர் வெங்கடேஷ்யோகா பயிற்சி குறித்து பேசினார். பாரதி கவி முற்றத் தலைவர் கி. முத்தையா பேச்சு பயிற்சி குறித்து பேசினார். கதை சொல்லுதல், நூல்கள் வாசித்தல் குறித்து நூலக உதவியாளர் மாரியம்மாள் பேசினார். படித்ததில் பிடித்தது என்ற தலைப்பில் மாணவன் ப.லெட்சுமண ராஜ்.மாணவி மு. ரோகினி மாணவி பகவதிஆகியோர் பேசினர்.

வீரவநல்லூர் பாரதியார் அரசு மேல்நிலைப்பள்ளி, செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி, வெள்ளாங்குள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த +2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பரிசுகளை பேரூராட்சி மன்ற கவுன்சிலர் ஆர். அனந்தராமன் மற்றும் சந்தானம் ஆகியோர் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் வாசகர் வட்ட துணைத்தலைவர் ச.பி.இராமன் வழக்கறிஞர் சந்தனகுமார் பெரியார் செல்வம் பாத்திலிங்கம் உலகநாதன நூலகர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
வாசகர் வட்ட பொருளாளர் பெரியார் பித்தன் நன்றி கூறினார். மேலும் நூலக பயன்பாட்டிற்காக 10 பிளாஸ்டிக் நாற்காலிகள் வீரவநல்லூர் சுரேஷ் மெடிக்கல் சார்பில் வழங்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *