நாமக்கல்

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக அனுமதி கொடுத்து உச்ச நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில்

அதைக் கொண்டாடும் விதத்தில் நாமக்கல் மாவட்டம்
இராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை அருகே முள்ளுக்குறிச்சி ஊராட்சி, தும்பல்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை துவங்கியது

மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை
மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் சிறப்பாக அமைக்கப்பட்டு

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கான தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி ஜல்லிக்கட்டுப் போட்டி வாடிவாசல் அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு, வீரர்கள் மைதானத்துக்குள் வருவதற்கு தனியாக பாதை அமைக்கப்பட்ட
டு,ஜல்லிக்கட்டு மைதானத்தில் பார்வையாளர்கள் நுழையாமல் தடுக்கும் வகையில் இரும்பு தடுப்பு பெரிய அளவில் அமைக்கப்பட்டிருப்பட்டு,காளைகள் வெளியேறும் இடத்தில் மைதானத்தில் சுற்றிலும் இரண்டுடடுக்கு தடுப்பு அமைக்கப்பட்டு, காளைகளை உரிமையாளர்கள் எளிதில் பிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு ,

மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வரும் காளைகளை ஆய்வு செய்ய கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தனியாக பந்தல் அமைத்து, மருத்துவ குழுவினர் அவசர சிகிச்சை அளிக்க தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு , ஜல்லிக்கட்டு காளைகள் வரும் பாதையில் பாதை முழுவதும் பந்தல் அமைக்கப்பட்டு, , அவசர சேவை ஊர்தி (ஆம்புலன்ஸ்) வருவதற்காக தனியாக வழி ஏற்பாடு செய்யப்பட்டு, பார்வையாளர்கள் அமருவதற்கும், தனியாக இடம் ஒதுக்கி ஏற்பாடுகள் செய்யப்பட்டு

மேலும், ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் வீரர்களுக்கு பாதுகாப்பாக தேங்காய்நார் சரியான முறையில் பரப்பப்பட்டு தேவையான ஒலிபெருக்கி அமைப்புகள் ஏற்பாடு செய்தும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளின்படி, தேவையான ஏற்பாடுகளை முழுமையாக செய்து ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது

இதில் 320க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை களத்தில் இறக்கப்பட்டு 150க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு வீரர்கள் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கி வருகிறார்கள் ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களித்து வருகிறார்கள்

போட்டியை காலை உறுதி மொழி எடுத்து கொண்ட பிறகு தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் கொடி அசைத்து துவக்கி வைத்தார் அவருடன் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ச .உமா ஆகியோர் இருந்தனர்

இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.இராமசுவாமி,
உள்ளிட்ட விழா குழுவினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *