மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ்

திருவாரூர்  மாவட்டம்  மன்னார்குடி அருகே  ஏத்தக்குடி காலனி தெருவை சேர்ந்தவர் மணியன். இவரது மனைவி  லட்சுமி (85) . இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். கணவன் மணியன் 8 ஆண்டுகளுக்கு  முன்பு இறந்துவிட்டார் இரண்டாவதுமகளான அன்பரசி என்பவர்  வீட்டில் லட்சுமி  வசித்து வந்தார்.

இந்த நிலையில்,  வட ஏத்தக்குடி  மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டுகடந்த ஞாயிறு  இரவு நடந்த  கலை நிகழ்ச்சியை பார்ப்பதற்கு சென்ற லட்சுமி இரவுவீடு திரும்பவில்லை.  இதையடுத்து லட்சுமியின்  உறவினர்கள் அவரை பல இடங்களில்  தேடியும்  கிடைக்கவில்லை.

நேற்று  (திங்கள் ) மாலை ஆறுமணி அளவில்  மாரியம்மன் கோயில் அருகே உள்ள அறுவடைக்குதயாராக இருந்த வயல்வெளியில் பெண் சடலம்  சேறும்  சகதியுமாக இறந்த நிலையில் கிடந்தது அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அருகில் இருந்த தலையாமங்கலம் காவல் நிலையத்திற்கு  தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் திருவாரூர் மாவட்ட காவல்  கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை , மாவட்ட காவல்துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட காவலர்கள்  சம்பவ இடத்துக்கு சென்று லட்சுமி  இறந்து கிடந்த  இடத்தை பார்வையிட்டு விசாரணையை தொடங்கினார்கள் .

அதனைத்தொடர்ந்து  திருவாரூரில் இருந்து கைரேகை நிபுணர்கள்  தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுசோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, மூதாட்டி லட்சுமியின் உடலை காவல்துறையினர்  கைப்பற்றி  மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு  பிரேத  பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவில் திருவிழா கலை  நிகழ்ச்சி  முடித்துவிட்டு  நள்ளிரவு வயல் வழியே நடந்து சென்ற மூதாட்டி லட்சுமிதனியாக  வீடு திரும்பியதை நோட்டமிட்ட  மர்ம நபர்கள்  அவரை  பின்தொடர்ந்து வந்து வழிமறித்து   வயலில் உள்ள  சேற்றில் தலையை  வைத்து   கொலை செய்து அவர் கழுத்தில் உள்ள செயின்  , தோடு, மற்றும்   மூக்குத்தி உள்ளிட்ட 3 பவுன்  நகைகளை திருடி சென்றுஇருக்கலாம் என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

இந்த  கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்களை  பிடிக்க ஏதுவாக ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர் . 

மூன்று பவுன் நகைக்காக  மூதாட்டியை சேற்றில் அமுக்கி  கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *