சோழவந்தான்,

சோழவந்தான் அருகேஇரும்பாடி ஊராட்சிக்குட்பட்ட சின்ன இரும்பாடி கிராமத்தில் சாலையோரம் நெடுஞ்சாலைக்கு சொந்தமான பட்டுபோன அரசமரமும் மற்றொரு சாலையோர புளிய மரத்தின் அடிபகுதி தீப்பற்றி எரிந்து முறிந்து விழம் ஆபத்தான சூழல் உள்ளது. இதனால் கிராம பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இக்கிராம பகுதியில் சாலையோரம் உள்ள புளிய மரத்தின் அருகே இருந்த குப்பையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் தீ வைத்துள்ளார். இதனால் குப்பை முழுவதும் எரிந்து அருகில் உள்ள புளிய மரத்திலும் தீ பற்றியது. இதனை கண்ட மக்கள் தண்ணீர் கொண்டு தீயை அணைத்தனர். இந்நிலையில் மரத்தின் அடிப்பகுதி முழுவதும் எரிந்து கருகி சேதமாகி எப்போது முறிந்து சாய்ந்து குடியிருப்பு வீடுகள் மீது விழந்து உயிர்பலி வாங்கும்.ஆபத்தான சூழல் நிலவுகின்றது.இதேபோல் இரும்பாடி ஊரணிகரையில் உள்ள ஒருகிணைந்த சுகாதார வளாக அருகில் பல ஆண்டுகள் பழமையான இரட்ச அரசமரம் பட்டு போயி கிளைகள் முறிந்து விழம் நிலையில் அவ்வழியே செல்வோரை அச்சுறுத்தி வருகின்றது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் பிச்சை. கூறுகையில், மரத்தின் அடிப்பகுதி முழுதும் தீயில் எரிந்து சாம்பலானது. இந்நிலையில் ரோட்டோரம் உள்ள சேதமான மரங்களை அகற்ற ஊராட்சித் தலைவரிடம் கோரிக்கை வைத்தோம். ஹைவேக்கு சொந்தமான மரத்தை வெட்ட அனுமதி கேட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் இம்மரம் விழுந்து மின்கம்பம் பொதுமக்களுக்கு உயிர் சேதங்கள் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க.வேண்டூம் என்றார்.
ஊராட்சி தலைவர் ஈஸ்வரிபண்ணைசெல்வம் கூறியதாவது;
இப்பகுதியில் சாலையோரம் உள்ள சேதமான மரங்களை அகற்ற சம்ந்தப்பட்ட துறையினர். நடவடிக்கை எடுக்கக்கூறி கடந்த கிராம சபையில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி பின் ஜமாபந்தியில் மனு அளித்துள்ளோம் பொதுமக்களின் நலன் கருதி அவசர கால நடவடிக்கையாக சேதமான மரங்களை வெட்டி அகற்ற. நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க. வேண்டும் என கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *