நாமக்கல்

நாமக்கல் கிழக்கு மாவட்டம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டசெயலாளர் பழ.மணிமாறன்மற்றும் திருச்செங்கோடு வட்டம் மல்லசமுத்திரம் .மொஞ்சனூர் கிராமத்தில்அருந்ததியர் தெரு,ஊர் பொதுமக்கள்,
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ச. உமாவிடம் மனு ஒன்றை இன்று அளித்தனர்

முன்னதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வந்த அவர்கள்செய்தியாளர்களை சந்தித்து தங்களின் கோரிக்கை குறித்து மனுவின் நகலை தெரிவித்தனர்

அதில் அருந்ததியர் மக்கள் மயான பாதை தொடர்பாக இருபதாண்டு கால் கோரிக்கை ஏற்று தமிழ்நாடு சட்டம் 33 1978 பிரிவு 4(1) கீழ் 2012ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் கையகப்படுத்திய நிலத்தில் மயான பாதை அமைத்து தர வேண்டி.என்றும்மொஞ்சனூர் கிராமத்தில் அருந்ததியர் மக்கள் 60 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடியிருப்புக்கு அருகே 300 மீட்டர் தொலைவில் கரடு அருகே மயானம் இருக்கிறது.

மயானத்திற்கு இவர்கள் குடியிருப்பில் இருந்து புறம்போக்கு நிலத்தில் பல தலைமுறைகளாக பிணத்தை எடுத்து சென்று வந்து கொண்டிருந்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன் அந்த புறம்போக்கு நிலத்தை ஒட்டி உள்ள கவுண்டர் சமூகத்திற்கு இந்த பாதையும் சேர்த்து பட்டா வழங்கப்பட்டது.

பின்னர் அவர் என்னுடைய நிலம் நீங்கள் பிணத்தை எடுத்து வரக்கூடாது. என்று பாதையை தடுத்துவிட்டார்.

இதைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகளும் அவ்வூர் பொது மக்களும் 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி பல்வேறு வழக்குகளை காவல் துறையினர் மக்கள் மீதும் விடுதலைச் சிறுத்தைகள் மீதும் தொடர்ந்து தற்போது கூட திருச்செங்கோட்டில் 80 பேர் மீது போடப்பட்ட வழக்கு நடைபெற்று வருகிறது.

2012 ஆம் ஆண்டு ஒருவர் இறந்த பின் பிணத்தை எடுத்து செல்வது தொடர்பாக போராட்டம் நடத்திய அம்மக்கள் மீது காவல்துறையினர் கடுமையாக தடியடி நடத்தினர்.

இதனை அறிந்த தொல் திருமாவளவன் காவல்துறை கண்டித்து நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

அதன் பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்தித்தது தமிழக அரசின் 1978 ஆம் ஆண்டு சட்டம் பிரிவு 4(1) நிலம் கையகப்படுத்துதல் சட்டப்படி மக்களுக்கு மயான பாதைக்கு நிலம் எடுத்து தருமாறு கூறினார் அதன் அடிப்படையில் அப்போது இருந்த மாவட்ட ஆட்சியர் நிலத்தை கையகப்படுத்தி பாதை அமைக்க முயற்சித்த போது அந்த நிலத்திற்கு சொந்தக்காரர் உயர்நீதிமன்றத்தில் 2013 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

அவ்வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் 11-10-2022 அன்று தள்ளுபடி செய்து மயான பாதை அமைக்கலாம் என்று உத்தரவிட்டிருந்தனர்.

அதன் அடிப்படையில் தற்போதைய மாவட்ட ஆட்சியர் அம்மக்களின் நீண்ட கால கோரிக்கையான மயான பாதையை உடனே அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *