சத்தியமங்கலம் தாளவாடி 11 வயது முதல் 15 வயது வரையுள்ள 20 குழந்தைகளை தேர்வு செய்து அரசமைப்பு உரிமை கல்வி மன்றம் எனும் அமைப்பை ஏற்படுத்தி
அவர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் குறித்த கல்வியை வழங்கும் பணியை கடந்த இரண்டு ஆண்டுகளாக வான்முகில் மற்றும் சுடர் அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தலைமலையில் அமைக்கப்பட்ட அரசமைப்பு உரிமை கல்வி மன்றத்தின் சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியும், விழிப்புணர்வு கூட்டமும், கதை சொல்லல் நிகழ்வும் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில், இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டமும், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டமும் குழந்தைகளின் வயது 14 எனக் கூறுகிறது.
குழந்தை திருமண தடைச் சட்டம் குழந்தைகளின் வயதை 18 என வரையறுக்கிறது. இவ்வாறாக ஒவ்வொரு சட்டமும் ஒவ்வொரு வயதை வரையறுக்கும் போது பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே 18 வயதுள்ள அனைவரும் குழந்தைகளே என அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த கருத்தரங்கில், சுடர் அமைப்பின் இயக்குனர் எஸ்.சி.நடராஜ், கதை சொல்லிகள் சரிதா ஜோ, கண்ணன், தலைமலை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் துரைசாமி, செந்தில்குமார், அரசமைப்புரிமை கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.தேன்மொழி, நெறியாளர் சவிதா ஆகியோர் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *