கோவை சீரநாயக்கன்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள நாய்களுக்கான எரியூட்டு மயானத்தை கலெக்டர் கிராந்தி குமார் பாடி தொடங்கி வைத்தார். உடன் மாநகராட்சி கமிஷனர் பிரதாப், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோவை சீரநா யக்கன்பாளையத்தில் கோவை மாநகராட்சி, ரோட்டரி கிளப் ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட தனியார் அமைப்புகள் சார்பில் ரூ.35 லட்சம் மதிப்பில் நாய், பூனைக ளுக்கான மின்மயானம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மின் மயானத்தை கலெக்டர் கிராந்திக்குமார், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் கல்வெட்டை திறந்து வைத்து விட்டு தகன மேடைகளை பார்வை யிட்டனர்.

இதனை தொடர்ந்து, கலெக்டர் கிராந்திகுமார் கூறியதாவது:-‌கோவையில் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி சார்பில் நாய்களுக்கான மின் மயானம் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில், கட்டப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களது வீட்டில் வளர்க்கும் நாய், பூனைகள் இறந்த பின்பு அதனை இங்கு தகனம் செய்து கொள்ளும் வகையில் வடிவ மைக்கப்பட்டுள்ளது.

மேலும், இங்கு சாலை யில் உயிரிழக்கும் தெரு நாய்களை இலவசமாக தகனம் செய்து கொள்ளவும், ஒரு நாளைக்கு ஆறு நாய்கள் எரியூட்டிக்கொ ள்ளலாம்.

இந்த மின் மயானம் முழுக்க முழுக்க, எல்பிஜி கியாஸ் மூலமாக வடிவ மைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இறந்த விலங்குகளின், முழு கழிவுகளும், முற்றிலும் எரிக்கப்பட்டு, அதன் மாசு, வெளியே வராமல் பார்த்து கொள்வ துடன், மக்களுக்கு எந்தவித சுகாதார கேடும் ஏற்படாத வகையில் அமைக்க ப்பட்டுள்ளது.

வீட்டு நாய்கள், பூனை களை இங்கு எரியூட்டுவதற்கு ஆகும் செலவு குறித்து பரிசீலனை செய்து வருகிறோம், எல்பிஜி கேஸ் செலவு, பிற செலவுகளை கணக்கிட்டு எரியூட்டுவ தற்கான கட்டண தொகை அறிவிக்கபடும்.

கடந்த சில நாட்களாக தெருநாய்கள் கணக்கெ டுக்கும் பணி நடந்தது. இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக தெருநாய்கள் இருப்பது தெரியவந்தது. இதற்கு கிடைக்கும் வர வேற்பினை அடுத்து, கோவை புறநகர் பகுதியி லும் மின்மயானம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *