கோவையை சேர்ந்த இளைஞர் உதய் பிரகாஷ்..கடந்த சில வருடங்களாக ஸ்டார்ட் அப் தொடர்பான செயலிகளை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட இவர் (Zynoplix) ஜைனோ பிளிக்ஸ் எனும் செயலியை உருவாக்கியுள்ளார்.பிரகதி பழனிசாமி என்பவருடன் இணைந்து கடந்த ஒரு வருடமாக புதிய செயலியின் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஈடுபட்ட உதய்பிரகாஷ் தற்போது செயலியின் இறுதி வடிவத்தை உருவாக்கி அசத்தியுள்ளார்.

உலகின் முதல் செயலியாக தங்களுக்கு பிடித்த வீடியோக்களை யார் வேண்டுமானலும்,விற்கவும், வாங்கவும் வசதியாக உருவாக்கி உள்ள இதில் கணிசமான வருமானத்தை தினமும் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.இது இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உதய் பிரகாஷ்,இரண்டு பேர் சேர்ந்து இந்த செயலியை உருவாக்கியதாகவும்,நமது இந்திய கலாச்சாரத்தின் முக்கிய நிகழ்வுகளை சாதாரண செல்போன்களில் படம் பிடித்து இந்த செயலியில் பதிவேற்றம் செய்வதால் உலகின் எந்த பகுதியில் இருப்பவர்களும் இந்த வீடியோவை வாங்க முன்வருவதால் கணிசமான வருமானமும் இதில்,கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.வீடியோக்களை பதிவேற்றம் செய்ய மற்ற சமூக வலகதளங்களை போல அல்லாமல் இந்த ஜைனோ பிளிக்ஸ் செயலியில் பார்வையாளர்களின் எண்ணிக்கை விகிதத்தில் பணம் கிடைப்பது போல வீடியோக்களை விற்பனை செய்தும் இதில் வருமானம் பெற முடியும் என தெரிவித்தார்.

தற்போது உள்ள தொழில்நுட்பத்தில் இந்த செயலியின் வாயிலாக வேலைக்கு செல்பவர்கள் மட்டுமின்றி வீட்டில் இருப்பவர்களும் இந்த செயலியின் வாயிலாக எளிதாக பணம் சம்பாதிக்க இயலும் எனவும் அவர் தெரிவித்தார்.யூ டியூப்,பேஸ்புக்,வாட்சப்,என உலகின் முன்னனி செயலிகளின் இடையே தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஜைனோ பிளிக்ஸ் எனும் செயலியை உருவாக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *