கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசனட்டி பாரதி நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் நடராஜ் (த/பெ முனியப்பா )வயது 48 மனைவி மற்றும் இரு பிள்ளைகள் உள்ளனர் ,இவர் மே 11 ஆம் தேதி ஞாயிறு இரவு 10 மணி அளவில் தனது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்த பொழுது இவரை பின்தொடர்ந்து வந்த மர்ம ஆசாமி ஆட்டோ ஓட்டுநர் நடராஜ் அவர்களின் செல்போனை பறிக்க முயற்சி செய்துள்ளார்,

தன் செல்போனை தர மறுத்து சத்தம் போட்டுள்ளார் இதனால் கடும் கோபமடைந்த மர்ம ஆசாமி அருகில் இருந்த கற்பலகையை கொண்டு தொடர்ச்சியாக நடராஜின் தலையில் தாக்கியுள்ளார் இந்த வீடியோ காட்சிகள் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது, இந்த நிலையில் கடுமையாக தாக்கப்பட்ட நடராஜ் மயங்கி விழுந்துள்ளார்,

இதை பயன்படுத்திய மர்ம ஆசாமி நடராஜின் விலை மதிப்புமிக்க செல்போன் மற்றும் ரூபாய் 3000 ரொக்கம் ஆகியவற்றுடன் தப்பிச் சென்றுள்ளார் மயங்கிய நிலையில் கிடந்த இவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர், இதன் அடிப்படையில் சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்த ஓசூர் சிப்காட் காவல் துறையினர் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய குற்றவாளியை தேடி வருகின்றனர்,

இந்த சம்பவம் தொடர்பாக நம்மிடம் பேசிய படுகாயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் நடராஜின் நண்பரும் சக ஆட்டோ ஓட்டுநருமான மாதேஷ் நம்மிடம் கூறும்போது நாங்கள் இரவு பகல் பாராமல் குடும்பத்தை பாதுகாக்க வேண்டி ஆட்டோ ஓட்டி பிழைக்கின்றோம் எங்களுக்கு தற்போது இரவில் ஆட்டோ ஓட்டவே பயமாக உள்ளது ஓசூர் பகுதிகளில் தற்போது குற்றவாளிகளின் நடமாட்டங்கள் அதிகமாக உள்ளது

காவல்துறையினர் எங்களைப் போன்ற ஏழ்மையான ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எந்த விதமான அசம்பாவிதமும் நடக்காத வண்ணம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை நம்மிடம் தெரிவித்தார், கூடிய விரைவில் குற்றவாளியை கண்டுபிடித்து தகுந்த நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொள்வார்கள் என்கின்ற நம்பிக்கை இருப்பதாக சமூக ஆர்வலர்களும் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *