கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (பிபிடிசி) என்ற நிறுவனம் தனது நிறுவனத்திற்கு கர்நாடகா மாநிலத்தில் உள்ள கலசா எஸ்டேட் உரிமையாளர் சிவசுப்ரமணியம் வயது 80, மற்றும் அவரது மகனும் பங்குதாரருமான சொக்கலிங்கம் ஆகியோருடன் கலசா எஸ்டேட்டில் விளையக்கூடிய காப்பி கொட்டைகளை பிபிடிசி நிறுவனத்திற்கு விற்பனை செய்யவேண்டும் என்று கடந்த 2012 ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் செய்து அதனடிப்படையில் முன்பணமாக ரூ 2 கோடி ரூபாயை கலசா எஸ்டேட் உரிமையாளர்கள் பெற்றுச்சென்றுள்ளனர்

அதனைத்தொடர்ந்து ஒப்பந்தப்படி நடந்து கொள்ளாத நிலையில் கலசா எஸ்டேட்டிலிருந்து பிபிடிசி நிறுவனத்திற்கு கொடுத்த காப்பிக்கொட்டைக்கான தொகையை கழித்து மீதமுள்ள ஒருகோடியே 36 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை கலசா எஸ்டேட் நிறுவனத்தினர் பிபிடிசி நிறுவனத்திற்கு கொடுத்துள்ளனர்

இந்நிலையில் அந்த காசோலை சம்பந்தப்பட்ட வங்கியின் மூலம் அதற்கான தொகையில்லாமல் திரும்பியுள்ளதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கலசா எஸ்டேட் உரிமையாளர்கள் மீது பிபிடிசி நிறுவனத்தினர் வால்பாறை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இறுதி தீர்ப்பும் வழங்கியுள்ளது

இந்நிலையில் கலசா எஸ்டேட் உரிமையாளர்கள் அவ்வழக்கை மேல்முறையீடு செய்து வந்துள்ளதாகவும் இறுதியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் நீதிமன்றத்திற்கு சரிவர ஒத்துழைக்காமல் காலம் கடத்தி வந்ததாகவும் இதனால் சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவுப்படி வால்பாறை காவல்நிலைய ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து கலசா எஸ்டேட் உரிமையாளர் சிவசுப்ரமணியத்தை கைது செய்து வால்பாறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி சிவசுப்ரமணியத்திற்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது மேலும் தலைமறைவாகி உள்ள சிவசுப்ரமணியத்தின் மகனும் கலசா எஸ்டேட் பங்குதாரருமான சொக்கலிங்கத்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *