தென்னிந்திய அளவில் மோட்டார் மற்றும் பம்ப் உற்பத்தியில் முன்னனி நகரமாக கோவை உள்ளது.இந்நிலையில் தற்போது இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகரித்து வரும், நிலையில் ,கோவையில் கடந்த இருபது வருடங்களாக மோட்டார் உற்பத்தியில் ஈடுபட்டு வந்த பரதன் ஒசோடெக்ஸ் எனும் புதிய நிறுவனம் வாயிலாக பரதன் என்பவர் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.விவசயம்,குறுந்தொழில்,உள்ளிட்ட அனைத்து வணிக துறைகளில் பாரங்கள் ஏற்றி செல்லும் வகையில் உருவாக்கி உள்ள எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிமுகப்படுத்தினார்..

புதிய வாகனம் குறித்து,பரதன் கூறுகையில், சக்தி வாய்ந்த 10 kwh பேட்டரி, ஒரு சார்ஜில் 525 கிமீ தூரம் வரை செல்ல முடியும் வகையில் இதனை உருவாக்கி உள்ளதாகவும், நாட்டிலேயே புதிய முயற்சியாக முழுவதும் உள்நாட்டு தயாரிப்பாக இந்த வாகனத்தை உருவாக்கி உள்ளதாக தெரிவித்தார்….தொடர்ந்து பேசிய அவர், தற்போது வேகமாக வளர்ந்து வரும் எலக்ட்ரிக் வாகன துறையில் ஆராய்ச்சி மற்றும் துறை சார்ந்த மேம்பாடுகளை அதிகரிக்க மத்திய மாநில அரசுகள் முன் வரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்..

புளுடூத்,ஜி.பி.எஸ்.உள்ளிட்ட மொபைல் செயலிகளுடன் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் அதிக பாரங்களை ஏற்றி செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாகனம் அனைத்து தரப்பினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *