சோழவந்தான் அருகே திருவேடகம் ஊராட்சிகுட்பட்ட திருமால்நத்தம் கிராமத்தில் சுமார் 700…க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
ஒரு ஆழ்துளைகிணறு மின்மோட்டர் மூலம் ஆறுபதாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்க தொட்டியில் நீர்தேக்கி போதிய நீரை ஊராட்சி நிர்வாகம் சார்பில் வினியோம் செய்யாத நிலையும் தெருக்களில் பொதுகுழாய் இல்லாமல் கிராம பெண்கள் தண்ணீருக்கு அலையும் அவலநிலை தொடகின்றது .இதனால் இக்கிராம மக்கள் ஆர்.ஓ. வாட்டர் பிளாண்டில் குடம்நீர் ரூ.5.க்கு விலைக்கு வாங்கி குடிநீர் பருகி வரும் அவலசூழலும்.நிலைவி வருகின்றது மேலும் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகள் தோறும் குழாய் அமைக்கும் திட்டம் இக்கிராமத்தில் முழமையாக செயல் படுத்தபடாமலும் . தெருக்களில் கழிவுநீர் வாய்க்காலை. அகலபடுத்தி உயர்த்தி கட்டி பராமரிக்காததால் காளியம்மன் கோவில் தெருவில் கழிவு நீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேடு நிலவுவதால் கொசு உற்பத்தியாகி இக்கிராமத்தில் உள்ள குழந்தைகள் அடிக்கடி காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி வருகின்றர் என கிராம பொதுமக்கள் குற்றம்சாட்டி இக்கிராம மக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிவுநீர் வாய்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர மாவட்ட கலெக்டர் சங்கீதா.நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்
இதுகுறித்து கிராமவாசி கருப்பாயி 55.திருமால்நத்தம் கிராமத்தில்தெருக்குழாய் சக்கடை வசதி இல்லாதநிலை தொடர்வதால் பக்கத்து வீடுகளில் போர்வெல் தண்ணீர் இரவல் வாங்கி பயன்படுத்தி வரும் வருகின்றேன்.மேலும் இது குறித்து ஊராட்சியில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றார்..மேலும் கிராமத்தை சேர்ந்த ராஜகுமாரி.35. கூறியபோது..இக்கிராமத்தில் 200,க்கு மேள்பட்ட வீடுகள்
உள்ளது. மக்களுக்கு தேவையான குடிநீரை முறையான ஊராட்சி நிர்வாகம் சப்ளை செய்ய வில்லை மேலும் போதிய அளவில் தெருக்களில் பொது குழாய் இல்லாதநிலையால் சுத்தரிக்கப்பட்ட நீரை குடம்.ரூ.5.க்கு விலை கொடுத்து வாங்கி பருகுகின்ற சூழலில் தொடர்கின்றது. இதனால் மழைகாலத்தில் பெய்யும் நீரை பிடித்து சேமித்து பாதுகாத்து குடிநீராகவும் பயன்படுத்தி வருகின்றோம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *