மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது இதில் ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர் குறிப்பாக பரசலூர் ஒன்றிய தேமுதிக கவுன்சிலர் கே.எஸ் கிருஷ்ணன் பேசும்போது. பரசலூர் ஊராட்சி திருவள்ளுவர் தெரு, நக்கீரர் தெரு அண்ணாமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை அமைத்து தர வேண்டும்.

இதேபோல் மேலக்கட்டளை கலைஞர் நகர் இடையே சாலை அமைக்க வேண்டும். பரசலூர் ஊராட்சியில் பாரதப் பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் கீழ் 2001-2002 ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்ட 6 வீடுகள் முழுமை பெறாமல் உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பரசலூர் ஆரம்பப்பள்ளி விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும், பரசலூரில் கருமாதி மண்டபம் அமைக்கப்பட வேண்டும் மண்டபம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து பேசினார்.

இதனை தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டத்தின் கீழ் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் புதிதாக சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று கூறினார்.
ஒன்றிய குழு கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *