கோவை, குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இவ்வருடம் இளங்கலைப் படிப்புகளில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கான தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

பிரபல தமிழ் பட்டிமன்ற பேச்சாளர் எஸ்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

இதில் இவர் பேசியபோது,

வாழ்க்கையில் நாம் எங்கே போக உள்ளோம் என்பதை முதலிலேயே தீர்மானிக்க வேண்டும். நமது தோற்றமே நாம் எப்படி போகப் போகிறோம் என்பதை முடிவு செய்யும். எனவே புற மற்றும் அக அழகும் நமக்கு முக்கியம். எதிர்கால வெற்றிக்கு கல்வியுடன், திறமை, ஒழுக்கம், மற்றும் பண்பு வேண்டும். பெற்றோர்களால் இதுவரை வழிநடத்தப்பட்டவர்கள் இனிமேல் உங்கள் தனிதிறனால் வாழ்க்கையை தொடங்க உள்ளீர்கள்.

இன்றைய இளம் பருவத்தினர் உடல் பயிற்ச்சிக்கு, உணவிற்கு மற்றும் தூக்கத்திற்கு முக்கிய இடத்தினை கொடுத்து ஆரோக்கியத்துடன் இருங்கள். உடல் மற்றும் மன ஆரோக்கியம் கல்வியில் நன்கு பயில வழிவகுக்கும். நாம் தினமும் என்ன செய்தோம் என்பதை நினைத்து மதிப்பிடுங்கள். அவமானம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. நாம் பட்ட அவமானத்தை வெகுமணமாக மாற்ற வேண்டும். சோதிக்கும் போது வீறுகொண்டு எழவேண்டும். நெருக்கடியினை அதிகம் சந்தித்தவர்கள் தான் வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள். அப்பொழுது கோபத்தினை, அவமானத்தை மற்றும் உணர்வை உணர்ந்து பயன்படுத்த வேண்டும்.

நல்ல விஷயங்களுக்காக மற்றும் சமூக ஊடகத்தினை பயன்படுத்துங்கள். எப்பொழுதும் இயல்பாக இருங்கள். நேசித்து செய்யுங்கள். சுமையுடன் செய்யாமல் நேசித்து செய்யுங்கள்.நேசித்து படியுங்கள். கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்துங்கள். நாம் செய்யும் சாதனைகள் நம்மை பேச வைக்க வேண்டும்.யாரையும் ஊக்குவிக்க முடியாது. நம்மை நாம்தான் ஊக்கப்படுத்த வேண்டும். புறந்தள்ளும் உறவுகள் நம்மை பார்த்து புகழ வேண்டும் எனக் கூறினார்.

இதனிடையே இக் கல்விக் குழுமங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, அறங்காவலர் கே.ஆதித்யா புதிதாக சேர்ந்த மாணவ-மாணவியர்கள் கல்வியில், வாழ்க்கையில் வெற்றியடைய வாழ்த்தினார்கள். முன்னதாக இக் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆர்.ஜெகஜீவன் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் கே.சுந்தரராமன் தலைமை வகித்து, புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு நடத்தை விதிகள் குறித்து பேசினார். முடிவில் இக் கல்லூரி துணை முதல்வர் முனைவர் ஆர்.விஜயசாமுண்டீஸ்வரி நன்றி கூறினார்.

ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை பாடங்களில் சேர்ந்து உள்ள மாணவ-மாணவியர்கள் பிளஸ் டூ தேர்வில் முதலிடம் பெற்ற 32 பேர் கவுரவிக்கப்பட்டனர்.

மை கிளாஸு ஸ்ரூம் என்ற ஆன்லைன் போர்டல் செயலில் சிறப்பாக பயன்படுத்திய மூத்த மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் ஜேகே ஸா நிறுவனம் மற்றும் இக்கல்லூரியின் வணிகவியல் துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் மாணவர்களுக்கு சீ ஏ பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *