சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் நாமக்கல் மாவட்ட தலைமை வங்கி சார்பாக நடமாடும் ஏடிஎம் வாகனம் இயக்கப்பட்டு வருகிறது

சமீபத்தில் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் துவக்கி வைக்கப்பட்ட இந்த நடமாடும் ஏடிஎம் வாகனம்

இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வந்திருந்தது

இந்த ஏ.டி.எம் வாகனத்தை ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர் வினோத்தும், இந்த ஏடிஎம் வாகனத்தில் பொறுப்பாளர் சேலம் கூட்டுறவு வங்கியின் கிளர்க் பழனியப்பன் ஆகியோர்களும் அதை கொண்டு வந்திருந்தனர்

இந்த வாகனத்தை துவக்கி வைத்த நாளிலிருந்து இதுவரை கையில் துப்பாக்கி ஏந்திய முன்னாள் ராணுவ வீரர் ஒருவரை பாதுகாவலராக அமர்த்த வேண்டும் அந்த பணிக்கு இதுவரை யாரும் அமர்த்தப்படவில்லை நிரந்தரமான ஓட்டுனரும் இதற்கு இல்லை என்ற நிலையில் இன்று பல லட்ச ரூபாயுடன் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு இந்த சேலம் மத்திய கூட்டுறவு வங்கி ஏடிஎம் எந்திரம் பொருத்திய நடமாடும் ஏடிஎம் வாகனம் வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது

மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த வாகனத்தை துவக்கி வைத்த நாளிலிருந்து பொது மக்களுக்கு தெரியும் அளவிற்கு செய்தித்தாளர்களிலோ தொலைகாட்சிகளிலோ வேறு வகையிலோ இந்த வாகனம் குறித்து விளம்பரம் அல்லது செய்தி ஏதும் வராததால் இந்த சேலம் மத்திய கூட்டுறவு வங்கி நடமாடும் ஏடிஎம் மையத்தில் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்தும் இருக்கக்கூடிய வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரியாததால் யாருமே இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் இந்த நடமாடும் ஏ.டி.எம் மையத்தில் பணங்களை எடுக்க முன்வரவில்லை என்பதும்
இந்த வாகனத்தை வேடிக்கை மட்டும் பார்த்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *