நாகப்பட்டினம்

பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் Never enrolled( இதுவரைபள்ளிக்கே செல்லாத குழந்தைகள்) குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு தற்போது கீழ்வேளூர் ஒன்றியத்தில் நடைபெற்று வருகிறது.

அகரக்கடம்பனூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் த.அமுதா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் துர்கா, தலைமையாசிரியர் திருமதி தமிழ்ச்செல்வி மற்றும் ஆசிரியர் கோகிலா ஆகியோர் இக்கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.

மகளிர் சுய உதவிக் குழு தலைவரிடமும் இக்கணக்கெடுப்பு பற்றி எடுத்துரைக்கப்பட்டது. Never enrolled குழந்தைகள் எவரேனும் கண்டறியப்பட்டால் RTE-( , இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் -2009)- விதிப்படி வயதுக்கேற்ற வகுப்பில் சேர்க்கப்பட்டு கல்விப் பணியை தொடர வைக்கலாம் என்று எடுத்துரைக்கப்பட்டது. அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *