திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் புதிய பேருந்து இடநெருக்கடியில் சிக்கி தவிர்க்கிறது. இந்நிலையில் தனியார் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்து என்பது சர்வசாதானமாகிவிட்டது.

இதை ஒழுங்குபடுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகமும் செவிடன் காதில் ஊதிய சங்காக செயலற்று கிடக்கிறது.

செங்கம் புதிய பேருந்து நிலைத்திற்கு பேருந்துகள் உள்ளே செல்லும் சாலையில் தனிநபர்கள் நெடுஞ்சாலையில் 15 அடிக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்து கடை வைத்துள்ளார்கள். இதனால் பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலை மிகவும் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.

இதனால், தமிழ்நாடு அரசு பேருந்துகள் மற்றும் அந்த வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனம் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மிக சிரமமாக உள்ளது. மேலும் பல கடை உரிமையாளர்களும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளதால், அந்த சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பேருந்துகள் மற்ற வாகனங்கள் செல்வதற்கு மிகவும் நெருக்கடியாக உள்ள சூழ்நிலை ஏற்படுகிறது.

இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கும், கனரக வாகனங்கள் செல்வதற்கும், அரசு பேருந்துகள் செல்வதற்கும் மிகவும் இடையூறாக ஆக்கிரமிப்பு செய்த
கடைகள் ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்ற வேண்டும். இனிமேல் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் மக்கள் சிரமமின்றி நடந்து செல்ல பேரிகார்ட் யாரும் நகரத்தாத படியும் நிரந்தரமாக பேரிகார்ட் அமைக்க வேண்டும் என்றும் நடைபாதை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *