சோழவந்தான்

சோழவந்தானில் மாநில நிதிகுழ மான்ய திட்டம்ரூ 2.கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமல் பயன்பாடின்றி காட்சி பொருளாக இருந்து வரும் பேரூராட்சி பேருந்து நிலையம் மற்றும் சுமார் 60.கோடிக்குமேல் நிதி ஒதுக்கீடூ செய்து கட்டி முடிக்கப்பட்டு 7.ஆண்டுகளுக்கு மேலாக திறப்பு விழா காணாமல் இழத்தடிக்கப்பட்டு வரும் இரயிவே மேம்பாலம் உள்ளிட்டவைகளால் வாடிப்பட்டி அலங்காநல்லூர் மற்றும் நகரி வழியாக மதுரை செல்லும் அரசு பேருந்துகள் கடந்த சில ஆண்டுகளாக பசும்பொன்நகர் மற்றும் நகரி பிரிவு ஆகிய பகுதிகள் தற்காலிய பேருந்து நிறுத்தமாக செயல் பட்டு வந்தது

இதனால். உள்ளூர் வெளியூர் பயணிகளூம் விரிவாக்க பகுதி குடியிருப்பு வாசிகளூம் இரயில்வே கேட்டை கடந்து சென்று பஸ் ஏறி செல்ல பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

இந்நிலையில் தற்போது இரயிவே மேம்பாலம் திறக்கபடாமலே வாகனங்கள் பாலத்தின் மேல் சென்று வரும்நிலையில் .வாடிப்பட்டி அலங்காநல்லூர் மற்றும் நகரி மார்க்கமாக செல்லும் பேரூந்துளை சோழவந்தான் இரட்டை அக்ராஹாரம் மத்திய கூட்டுறவு வங்கி பகுதியில் நேற்று முதல் பொதுமக்கள் நலன் கருதி தற்காலிய பேருந்து நிறுத்தமாக போக்குவரத்துதுறை மண்ட அதிகாரிகள் அனுமதியோடு செயல்பட துவங்கியது. ஏற்கனவே இப்பகுதி சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது

இதனால் பாலம் மற்றும் இரட்டை அக்ராஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேகமாக வரும் வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களும் விலகி செல்ல வழியின்றி விபத்திற்குள்ளாகும் அபாய சூழல் நிலவுகின்றது. வாடிப்பட்டி நெடுஞ்சா லைதுறை மற்றும் சோழவந்தான் பேரூராட்சியும் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகனங்கள் நெருசல் மற்றும் விபத்தின்றி செல்லவும் எதிர்கால மக்கள்தொகை மற்றும் வாகன பெருக்கத்தை கருத்தில் கொண்டு முறையான திட்டமிடலோடு ரவுண்டா அமைக்க முன் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *