ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத மூன்றரை லட்ச ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அவர்களுக்கு கிடைக்கும் ரகசிய தகவலின் அடிப்படையில் அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்துவது வழக்கம்.அதன் அடிப்படையில் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருவாரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இன்று மாலை தீடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகுமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை என்பது நடைபெற்று வருகிறது.இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாலசுப்பிரமணியனிடமிருந்து கணக்கில் வராத 3 1/2 இலட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த பணம் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் இருந்து கொடுக்கப்பட்ட பணமாக இருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்,இன்று இரவு ஒன்பது மணி அளவில் இந்த சோதனை முடிவடையலாம் என்று தெரிய வருகிறது.அதன் பிறகே கணக்கில் வராத எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறித்த முழு விவரம் தெரிய வரும்.

திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.லஞ்ச ஒழிப்பு துறை துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சோதனையில் இதுவரை கணக்கில் வராத 3 1/2 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *