உணவு கலப்பட தடைச் சட்டத்தில் குறிப்பிடப்பட் டிருப்பதைக் காட்டிலும் வசூலிக்கப்படும் அபராதத் தொகையை குறைக்க வேண்டும் என வியாபாரிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.

தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் லால்வேனா மற்றும் துறை அதிகாரிகள், உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கங்களின் ஆலோசனைக்கூட்டம் மதுரையில் நடந்தது. இந்த கூட்டத்தில் உணவு பாதுகாப்பு சட்டம் குறித்து விவா திக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் மற்றும் அப்பளம் வடகம் மோர், வத்தல் சங்க மாநிலத் தலைவர் திருமுருகன் கோரிக்கை மனுவில்,’ உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச்சட்டம். விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் மாநிலமொழிகளில் இருக்க வேண்டும்.

ஒரே நிறுவனத் தின்உற்பத்தி நிலையம், விற்பனை நிலையம், சேமிப்பு கிடங்குகள் ஆகிவற்றைக்கு ஒரே உரிமம் வழங்க வேண் டும். மல்லியை பதப்படுத்த பல வருடங்களாக சல்பர் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் சல்பரின் அளவு குறித்து குறிப்பிட வில்லை. இது குறித்து முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும். சீனி கலந்த
வெல்லத்திற்கும் கருப்பட்டிக்கும் புதிய பெயர் வைத்து தரம் நிர்ணயிக்க வேண்டும்.

உணவு கலப்பட தடைச்சட்டத்தை காட்டி. லும் அதிகளவு உள்ள அப் ராத தொகையை குறைக்க வேண்டும். உணவு பாது காப்பு அதிகாரிகளால் மாதிரி எடுக்கப்பட்டு கலப்படம் இல்லை என்று உறுதி செய்து சான்றிதழை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலிறுத்தப்பட்டன.

கூட்டத்தில் உணவு விஞ்ஞானி பசுபதி, மதுரை மாவட்ட உணவு நியமன அலுவலர். ஜெயராம பாண்டியன். அப்பள சங்க மாநில பொருளாளர் விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *