கந்தர்வக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புதுநகர் அரசு உயர்நிலைப்பள்ளி, வேலாடிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய குறுவள மையங்களில் 6 முதல் 10 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு குறுவளமைய பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா அவர்கள் புதுநகர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற பயிற்சியினை பார்வையிட்டார்.

பயிற்சியில் மாணவர்களுக்கு உடல் நலம் பேணுதல், ஊட்டச்சத்து, மனத்திறன், மன அழுத்தம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பயிற்சி வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு நோய்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் கண் பார்வை குறைபாடு, முன் கழுத்து கழலை நோய் ,ஆட்டிசம் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுத்தும் அறிகுறிகளை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும், வளரிளம் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள் ,தன்சுத்தம், சுகாதாரம் குறித்தும்,பயிற்சி அளிக்கப்பட்டது .

இப்பயிற்சி பார்வையின் போது ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவி திட்ட அலுவலர் தங்கமணி, வட்டார கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி, நரசிம்மன் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்சிநர்கள் சுரேஷ்குமார், பாரதிதாசன், ராஜேஸ்வரி, சங்கிலி முத்து, இல்லம் தேடிக் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா ஆகியோர் செய்து இருந்தனர்.

கருத்தாளர்களாக ரவி, சுகன்யா, அலமேலு, முருகன், தங்கராசு,தவச்செல்வம்,மத்தியாஸ்,கண்ணன் , ராஜமாணிக்கம், ராமஜெயம், செந்தில்குமாரி, புவனேஸ்வரி, ராஜேந்திரன், சங்கர், ரவிச்சந்திரன் ராஜேந்திரன் ஆகியோர் செயல்பட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *