பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்

அரியலூர் மாவட்டத்தில் ரூ.11.44 கோடி மதிப்பீட்டில் 6 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

    அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தில் ரூ.11.44 கோடி மதிப்பீட்டில் 6 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அடிக்கல் நாட்டி  துவக்கி வைத்தார்.  

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்;காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்றைய தினம் அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர்; அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

   இதன்படி நெடுஞ்சாலைத்துறை - நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகு சார்பில் ஊராட்சி ஒன்றிய சாலைகளை இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்துதல்  திட்டத்தின் கீழ்  ரூ.6.45 கோடி மதிப்பீட்டில்  இலைக்கடம்பூர் முதல் R.S..மாத்தூர்  சாலை கி.மீ 0/0-5/5 தரம் உயர்த்துதல் பணியினை துவக்கி வைத்தார். இந்த சாலையினை செயல்படுவதும் மூலம் செந்துறை, R.S.மாத்தூர், படைவெட்டிக்குடிகாடு, சோழங்குடிக்காடு, சன்னாசிநல்லூர், பெரியாக்குறிச்சி, நத்தக்குழி, பொன்பரப்பி மற்றும் திட்டக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள பொது மக்கள்  பயன்பெறுவார்கள்.   

     மேலும் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.75.19 இலட்சம் மதிப்பிட்டில் பொன்பரப்பி முதல் சிறுகளத்தூர் சாலை மேம்படுத்தல் (கி.மீ 0/0-1/0) பணியினையும், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.24 கோடி மதிப்பிட்டில் சிறுகளத்தூர் முதல் கொடுக்கூர் சாலை மேம்படுத்தல் (கி.மீ 0/0-2/600) பணியினையும், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.71.43 இலட்சம் மதிப்பிட்டில் சன்னாசிநல்லூர் முதல் தளவாய் பள்ளி சாலை மேம்படுத்தல் (கி.மீ 0/0-0/910) பணியினையும், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.92 கோடி மதிப்பிட்டில் அயன்தத்தனூர் முதல் முல்லையூர் பள்ளி சாலை மேம்படுத்தல் (கி.மீ 0/0-4/130) பணியினையும் துவக்கி வைத்தார்.

   தொடர்ந்து குழுமூரில் 15வது நிதி குழு மானியம் (சுகாதார நிதி) திட்டத்தின் கீழ் ரூ.35 இலட்சம் மதிப்பிட்டில் குழுமூர் துணை சுகாதார மைய கட்டிட கட்டுமானப் பணியினையும் துவக்கி வைத்தார்.மேலும் நடைபெறும் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் திரு.முருகண்ணன், வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், கோட்டப் பொறியாளர்( நபார்டு மற்றும் கிராம சாலைகள் திருச்சி) பெ.வடிவேல், உதவிக் கோட்டப் பொறியாளர் அரியலூர் வி.பி.சரவணன்,உதவி பொறியாளர் எஸ்.பிரியதர்ஷினி, வட்டாட்சியர் பாக்கியம் விக்டோரியா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *