நெல்லித்தோப்புத் தொகுதியில் படுமோசமாக உள்ள சாலைகளை செப்பனிடக் கோரி, நெல்லித்தோப்பு தொகுதி திமுக சார்பில், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் பெற்றது.


புதுச்சேரி மாநிலம், நெல்லித்தோப்பு தொகுதிக்கு உட்பட்ட திருமால் நகர், கருணாகரப்பிள்ளை வீதி, செல்லப்பெருமாள் கோயில் வீதி, பிள்ளையார் கோயில் வீதி, வேல்முருகன் நகர், சத்யா நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து உள்சாலைகளும் படுமோசமாக குண்டும் குழியுமான நிலையில் பல ஆண்டுகளாக சாலை போடாமல் உள்ளது.

மேலும் லெனின் வீதியில் பக்க வாய்க்கால் கட்டாமல் ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி சுகாதாரக் கேடு விளைவிக்கும் வகையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக நேரிடுகிறது. பொதுமக்களின் நலன்கருதி சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கக் கோரி பொதுப்பணித்துறை மற்றும் புதுச்சேரி நகராட்சியை வலியுறுத்தி, அரசின் கவனத்தை ஈர்க்கின்ற வகையில் நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள வீதிகள், இல்லங்களில் கருப்புக் கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தொடர்ந்து லெனின் வீதி பஜனை மடத்து வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தொகுதி கழகச் செயலாளர் நடராஜன், பொதுக்குழு உறுப்பினர் வேலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது, புதுச்சேரியை சிங்கப்பூராக மாற்ற வேண்டாம். ஏற்கனவே இருந்த சுகாதாரமான குடிநீர், சாலை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தால் போதும். புதுச்சேரி அரசு, பொதுப்பணித்துறை, புதுச்சேரி நகராட்சியால் புறக்கணிக்கப்பட்ட தொகுதியாக நெல்லித்தோப்பு இருக்கிறது. ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அடுத்து ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருவார்கள்.

ஆனால் இத்தொகுதியில் இருக்கும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் இருந்தும் இல்லாததுபோல் உள்ளார். இத்தொகுதி மக்கள் தன்னை புறக்கணித்தாலும் அவர்களுக்கு தொடர்ந்து பணியாற்றி வருகிறார் திமுக பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன். மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். முதன் முறையாக மக்கள் போராட்டத்தை திமுக முன்னெடுத்திருக்கிறது.

அரசு தொடர்ந்து புறக்கணித்தால் மக்களை திரட்டி திமுக தொடர்ந்து போராட்டம் நடத்தும். ஆளும் கட்சி உறுப்பினராக இருந்தும் மக்களிடம் தொடர்பு இல்லமால் இருக்கிறார். அதனால் தான் மக்கள் படும் இன்னல்கள் தெரியவில்லை. திமுக–வின் கோரிக்கை இங்குள்ள சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்து 10 நாட்கள் தொகுதியில் முகாமிடுங்கள். மக்களை சந்திக்க வேண்டும். அப்போது தான் மக்கள் பிரச்சனை தெரியும். அதைவிடுத்து சவால் விடுவதெல்லாம் ஆகாது. நம்பி வாக்களித்த மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று யோசித்து பார்க்க வேண்டும். நீங்கள் மக்கள் நலத்திட்டங்களை செய்யவில்லை என்றால் அதிகாரிகளை தட்டி எழுப்பி அந்த பணிகளை திமுக செய்யும். இவ்வாறு பேசினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், திமுக மாநில துணை அமைப்பாளர் வி. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளர் இரா. செந்தில்குமார், எம்.எல்.ஏ., துணை அமைப்பாளர் தைரியநாதன், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், இளம்பரிதி, தொகுதி செயலாளர்கள் சக்திவேல், பாண்டு அரிகிருஷ்ணன், ராஜாராமன், ஆறுமுகம் மற்றும் நெல்லித்தோப்பு தொகுதி தொகுதி அவைத் தலைவர் பாணுகணேசன், துணைச் செயலாளர்கள் கிருபாகரன், சங்கீதா, தகவல் தொழில்நுட்ப அணி அருண், அலெக்ஸ்சாண்டர், வழக்கறிஞர் அணி ஞானராஜ், சந்தோஷ், கிளைச் செயலாளர்கள் கருணகாரன், சங்கர், செல்வம், ஏழுமலை, பரிதிமாள், பக்கிரி (எ) ராஜேந்திரன், சக்திவேல், ராஜ், ஏழுமலை, சிறுபாண்ளை நலப்பிரிவு அகஸ்டீன் சித்து, பாபு, கமல்பாலா, பாஸ்கர், செல்வகுமார், ஜெகதீசன், ரமேஷ், நவீனா கார்டன் ரமேஷ், முருகேசன், தட்சிணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *