பனை ஓலையில் திருமண அழைப்பிதழ்

வெங்காடம்பட்டி பூ திருமாறன் மகள் திருமண விழா – புதுச்சேரி முதல்வர் – பங்கேற்பு

தென்காசி, மே – 17

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள வெஙகாடம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் பூ திருமாறன் இவரது மகள் டாக்டர் தமிழருவி திருமண விழா ஜூன் 10ஆம் தேதி அன்று தென்காசி புனித மிக்கேல் தேவாலயத்தில் வைத்து நடைபெற உள்ளது.

இந்த விழாவில் புதுச்சேரி மாநில முதல்வர் என் ரங்கசாமி முன்னாள் தமிழக டிஜிபி தேவாரம் ஐபிஎஸ் , திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் ஆர்.எஸ்.என்.ராவ் கெய்க்வாட் மற்றும் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.இந்த திருமண விழாவிற்கான அழைப்பிதழை பனை ஓலையில் வடிவமைத்து தனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி வருகிறார். பனை ஓலையில் வடிவமைக்கப்பட்ட இந்தத் திருமண அழைப்பிதழ் அனைவரிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

பொதுவாக திருமண அழைப்பிதழ்கள் அட்டை மற்றும் காகிதங்களில் அச்சடிக்கப்படுவது வழக்கம். இவர் புதிய முயற்சியாக பனை ஓலைகளில் பிரிண்ட் செய்து ஐந்து பனை ஓலைகளில் திருமணம் குறித்த முழு விவரங்களையும் அச்சடித்து பல்லாண்டு வாழ்க என்பதை பனையாண்டு வாழ்க! என்ற தலைப்பில் அச்சிட்டு அனைவருக்கும் அனுப்பி வருகிறார்.

அந்த பனைஓலை திருமண அழைப்பிதழில் பூ திருமாறன் மகள் டாக்டர் தமிழ் அருவி திருமண அழைப்பிதழ் என்ற தலைப்பில்
வெங்காடம் பட்டி பூங்குன்றன் – ராதாபாய் அவர்கள் பேத்தியும், சமூக ஆர்வலர் பூ.திருமாறன் – சாந்தி தம்பதியரின் ஒரே மகளான டாக்டர் தி.தமிழருவி எம்பிபிஎஸ் மணமகளுக்கும், நாகர்கோவில் ராமன் புதூர் டாக்டர் ஏ.ரெக்ஸ் பால்ராஜ் – வி ஜாஸ்மின் தம்பதியரின் ஒரே மகன் டாக்டர் ஆர் எஸ் பெசன்ஜாஸ் பிடிஎஸ் மணமகனுக்கும் வரும் 10.06.2024 திங்கள்கிழமை வைகாசி 28ஆம் தேதி காலை 10 மணி அளவில் தென்காசி புனிதமிக்கேல் தேவாலயத்தில் நடைபெறும் திருமண நிகழ்வுக்கும்,

அதனைத் தொடர்ந்து காலை 11:30 மணி அளவில் இலஞ்சி ரதி மஹாலில் மணமக்களை ஆசீர்வதிக்கும் நிகழ்ச்சி மற்றும் மதிய சைவ விருந்திலும் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதிக்கும் படி அன்புடன் வேண்டுகிறேன்.

மேலும் திருமண நாள் அன்று 10.06.2024 காலை 11 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இரு வீட்டு உறவு நட்பு மற்றும் நலம் விரும்பிகள் பங்கேற்கும் இரத்ததான முகாம் நடைபெறுகிறது. திருமண விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மணவீட்டார் சார்பில் விதைப்பந்து சுருக்குப்பை வழங்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் என். ரங்கசாமி, தமிழக முன்னாள் டிஜிபி தேவாரம், திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன்
ஆர்.எஸ்.என்.ராவ் கெய்க்வாட் , லண்டன் டாக்டர் மாதுரி, டாக்டர் விவியென் ஆகியோர் கலந்து கண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள். இந்தத் திருமண விழாவில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமக்களை ஆசீர்வதிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன் இவ்வாறு அந்தப் பனை ஓலையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர் மணமகளின் பெற்றோர் வெங்காடம் பட்டி பூ.திருமாறன் சாந்தி, மணமகளின் இளைய சகோதரர்கள் டாக்டர்
தி.ஏகலைவன், தி.நன்னன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள், சிறப்பாக ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *