தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி வளாகத்தில்நான் முதல்வன் உயர்வுக்கு படி எனும்-உயர்கல்வி சிறப்பு வழிகாட்டல் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ். சரவணகுமார் தலைமை தாங்கி, குத்து விளக்கேற்றி வைத்து-சிறப்புரை
யாற்றினார்.

உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டியன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்நாராயண மூர்த்தி வரவேற்புரையாற்றினார். பெரியகுளம் ஒன்றியம், ஆண்டிப்பட்டி ஒன்றியம் கடமலை மயிலை ஒன்றியம் ஆகிய பகுதிகளில் இருந்து, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவியர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

கல்வித்துறை சார்ந்த வல்லுநர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவியர் உயர் கல்வி பெறுவது குறித்து ஆலோசனை வழங்கினர். இந்த நிகழ்வில், நான் முதல்வன் திட்டம் குறித்து விளக்கவுரையாற்றினார்.

நிகழ்வில், கோவை பாரதியார் பல்கலைக்கழக தொழில் நெறி வழிகாட்டும் வல்லுநர் சாம்சன், உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயற்பியல் துறை இணை பேராசிரியர் திருமலைசாமி, டெக் பி ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் மாநில தலைவர் பாலசுப்ரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் மோகன் குமார்,ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி முதல்வர் ஜேசுராணி,
பெரியகுளம் வட்டாட்சியர் ஆர்த்தி (பொறுப்பு),
தாமரைக்குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி,துணைத் தலைவர் மலர்கொடி,பணி நியமன குழு தலைவர் பாலாமணி பழனி முருகன்,வருவாய் ஆய்வாளர் செல்வி,கிராம நிர்வாக அலுவலர் வித்யா, ஆகியோர் பள்ளி மாணவ மாணவியருக்கு நான் முதல்வன் “உயர்வுக்குப் படி ” திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். இந்த நிகழ்வில், மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலக பயிற்சி அலுவலர் செல்வராஜ் நன்றியுரையாற்றினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *