முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக
மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள புனரமைக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

மகளிர் சுயஉதவிக் குழுக்கள் நலனுக்காக அவர்தம் உற்பத்தி பொருட்களை சிரமமின்றி விற்பனை செய்து பயன் பெற ஏதுவாக மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே பூமாலை வணிக வளாகம் கடந்த 2002 ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த பூமாலை வணிக வளாகத்தில் 35 கடைகள் உள்ளன. இந்த பூமாலை வணிக வளாக கட்டடம் தற்போது ரூ.42.00 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சிகளாக பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி புதிதாக தொடங்கி வைக்கப்பட்ட பூமாலை வணிக வளாக கட்டடத்தில் குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் இந்திராணி, சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி பூமிநாதன் , கூடுதல் ஆட்சியர் சரவணன், மாநகராட்சி ஆணையர் பிரவீன் குமார், மாநகராட்சி மண்டல தலைவர் முகேஷ் சர்மா மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *