எஸ். செல்வகுமார் செய்தியாளர்

மூத்த ஓய்வூதியர்கள்,இளைய ஓய்வூதியர்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாட்டினை தமிழக அரசு களைய வேண்டும். சீர்காழியில் நடந்த ஓய்வுப்பெற்ற அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தனியார் திருமண மண்டபத்தில் மூத்த ஓய்வூதியர்கள் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. சங்கம் தொடங்கி 25ஆண்டு நிறைவடைகிறது. வெள்ளி விழா மாநாட்டை தமிழக முதல்வரை அழைத்து நடத்திட முடிவு செய்துள்ளோம்.

மத்திய அரசாங்கம் 7வது ஊதியக்குழுவில் நிறைவேற்றிய மூத்த ஓய்வூதியர், இளைய ஓய்வூதியருக்கும் இருக்ககூடிய ஓய்வூதிய முரன்பாடு களைய தனியான சிறப்பு கமிட்டி அமைத்து அறிக்கை பெற்று அதனை அமுல்படுத்தியுள்ளது.

அதன்படி தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கும் நிறைவேற்ற வேண்டும். திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் 70}வயது நிறைவடைந்தவர்களுக்கு 10சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் ஓய்வு பெறும்போது கம்டேஷன் என்ற தொகை அரசு வழங்குகிறது.

இதற்காக 15ஆண்டுகாலம் தவணையாக பிடித்து அந்த தொகை வழங்கப்படுகிறது. இவை மற்ற மாநிலங்களில் 12ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளதுபோல் தமிழக அரசும் 12ஆண்டுகளாக குறைக்கவேண்டும். பழைய மருத்துவ காப்பீடு முறையை மாற்றியமைத்துள்ளது.

அரசே மருத்துவகாப்பீட்டு அட்டையை வடிவமைத்து காப்பீட்டு கழகம் வழங்க ஆவணம் செய்யவேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், இந்த தீர்மானங்கள் வெள்ளிவிழா மாநாட்டிலும் நிறைவேற்றப்படவுள்ளதாகவும் மாநில தலைவர் ரெங்கராஜ் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *