பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த தேவாமங்கலம் கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

இந்த தீமிதி திருவிழாவில் கிராம நாட்டார்கள் வகையறா நாட்டார்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்ததின் பேரில் அவர்களது
தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 18-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் மகாபாரத கதைகளும் தொடர்ந்து பாடப்பட்டு வந்தபின் திரௌபதி அம்மன் தருமர், பீமன், அர்ஜுனர், நகுலன், சகாதேவன், கிருஷ்ணர் ஆகிய தெய்வங்களுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, வீதி உலா நடைபெற்றது.

பின்னர் திரௌபதி அம்மன், மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றதைத்
தொடர்ந்து அம்மன் பூ கரகம், அக்னி கரகம் ஜோடித்து ஏந்தியவாறு பக்தர்கள் பெரிய ஏரி கரையில் இருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவில் வளாகத்தை நெருங்கியதும் அக்னி குண்டத்திற்கு பூஜைகளுடன் ஆட்டுக் கிடா காவு கொடுக்கப்பட்டதையடுத்து அம்மன் பூ கரகம்,அக்னி கரகம் ஏந்தியவாறு சுமார் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து அருள்மிகு திரௌபதி அம்மனை வழிபட்டனர்.

இதில் தேவாமங்கலம் ஊராட்சியை அடுத்து உதயநத்தம் தினக்குடி, கோடாலி, கருப்பூர், சிலால், பொற்பதிந்தநல்லூர்,நாயகனைபிரியாள், அங்கராயநல்லூர், உத்திரக்குடி, கழுவந்தோண்டி, பெரியவளையம் என சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சுமார் 2500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனது அருள் ஆசி பெற்று சென்றனர்.

இதில் தா.பழூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் உதவி ஆய்வாளர் மோகன், பன்னீர்செல்வம் மற்றும் காவலர்கள், ஊர்க்காவல் படை காவலர்கள் விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கும்,பொது மக்களுக்கும் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மிக சிறப்பாக பாதுகாப்பு பணி வழங்கிய காவலர்களுக்கு சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டுகளைகளையும் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *