மதுபானம் குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தால் மகிழ்ச்சி தான் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார். சென்னை, தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- டாஸ்மாக் பணியாளர்களின் பிரச்சினையை சரி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். டாஸ்மாக் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பார் நடத்தி முடியும்; அதனை கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக பார் தேவைப்படும் இடங்களில் நீதிமன்ற வழக்கிற்கு பின் அனுமதி வழங்கப்படும். உரிமம் இன்றி பார் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட இடங்களில் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். டாஸ்மாக் வருமானத்தை கூடுதலாக்க வேண்டும் என்பதற்காக விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படுவதில்லை. டாஸ்மாக் கடைகள் மூலம் வருமானம் ஈட்டுவது என்பது அரசின் நோக்கம் அல்ல. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் குடிக்கும் பழக்கத்தை கைவிட்டால் மகிழ்ச்சியே. 500 கடைகள் மூடியதால் அந்த பகுதிகளில் குடிப்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மதுபானம் குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தால் மகிழ்ச்சி தான். அது குறித்து ஆய்வு செய்யவே இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சட்டவிதிகளை மீறாமல், மக்களுக்கு பயன்படும் வகையில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காலை 7- காலை 9 மணி வரை டாஸ்மாக் திறக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வருகின்றன. கோரிக்கைகள் குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை, ஆலோசனை மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. டெட்ராபேக்கில் மதுபானம் விற்கப்படுவதை மக்கள் விரும்புகின்றனர். டெட்ராபேக்கில் மதுபானம் கொண்டு வந்தால் கண்ணாடி பாட்டில் பயன்பாட்டை குறைக்க முடியும். கண்ணாடி பாட்டில் மது பலருக்கு பிரச்சினையாக உள்ளதால் டெட்ரா பேக்கில் மது கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *