மன்னார்குடி செய்தியாளர் தருண் சுரேஷ்

மன்னார்குடி செய்தியாளர் தருண் சுரேஷ்அரசு அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் நூதன போராட்டம்

கூத்தாநல்லூர் அருகே நீதிமன்ற உத்திரவை மதிக்காத தமிழக அரசு மற்றும் அரசு அதிகாரிகள் ஆதிதிராவிட மக்களை உயிரோடு விளையாடும் போக்கை கண்டித்து சேகரை கிராம மக்கள் சுடுகாட்டில் உயிருடன் ஒருவரை இறந்த உடலை தகனம் செய்வதுபோல் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுக்காவிற்கு உட்பட்ட சேகரை கிராமத்தில் பல ஆண்டுகாலமாக நூற்றுக்கணக்கான ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வரும் இச்சமூகத்தினர் பல ஆண்டுகாலமாக வீட்டுமனை பட்டா கேட்டு அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு வரும் போதிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இருப்பிடம் இன்றி குழந்தைகள், முதியோர்கள், கன்னிப்பெண்கள் ஆகியோரை வைத்துக்கொண்டு அவதியுற்று வருகின்றனர்.

குறிப்பாக அரசால் ஆதிதிராவிட மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதி ஆதிதிராவிட மக்களை சென்றடையாத நிலைக்கு காரணமாக அரசு அதிகாரிகள் இருந்து வருகின்றனர். மேலும் சேகரை கிராமத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்துவரும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அரசு அதிகாரிகள் உறுதுணையாக இருப்பதால் விவசாய பணிக்கு தண்ணீர் கிடைக்க வழியின்றி நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகிறது.

விளைநிலங்கள் அனைத்தும் வீட்டுமனைகளாக மாறியதால் சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனவே தமிழக அரசு ஆதிதிராவிட மக்களை பாதுகாக்க வேண்டியும், நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்து விளைநிலங்களுக்கு தங்கு தடையின்றி பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்க வேண்டியும்.

நீதிமன்றம் அவர்களுக்கு உரிய பட்டா வழங்கிட வழியுறுத்தி இதுவரை பட்டாவழங்காத அரசு அதிகாரிகளையும் தமிழக அரசை கண்டித்து சேகரை கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், விவசாயியுமான செந்தில் என்பவர் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த பல ஆண்டுகாலமாக பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்ட போதிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, செவிசாய்க்கவுமில்லை.

இந்நிலையில் மனிதனின் கடைசி பயணமாக உள்ள சுடுகாட்டிற்க்கு செந்திலின் உடல் பாடையில் வைத்து தூக்கி செல்லப்பட்டது. பின்னர் உடலை எரியூட்டும் வகையில் விறகுகளை அடுக்கி அதில் விவசாயி செந்தில் உடல் வைக்கப்பட்டது. பின்னர் அவர் உடல் முழுவதும் விராட்டி அடுக்கி வைத்து அவரது முகத்தை விராட்டியால் முடி இறுதி சடங்கு நடத்துவதுபோல் கடைசிவரை தத்ரூபமாக போராட்டத்தை சேகரை விவசாயிகள் முன்னெடுத்தனர்.

சுடுகாட்டின் தகனப் பகுதியில் ஆதிதிராவிட மக்களை ஏமாற்றாதே, நீர்நிலை ஆக்கிரமிப்பாளர் மீது நடவடிக்கை எடு என அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிட உடனிருந்த போராட்டக்காரர்களும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இறந்த உடலுக்கு தகனம் செய்யும் தத்ரூப போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *