தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் அண்ணல் அம்பேத்கர் படங்களை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.இந்த சுற்றறிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தேவேந்திர பேனாக்கள் இயக்கத்தின் நிறுவனத்தலைவர் வழக்கறிஞர் டி.சி.பாலசுந்தரம் அறிக்கை வெளியிட்டுள்ளார்

அவர் கூறுகையில்,நம் பாரத தாய்த்திருநாடு பழம்பெரும் பாரம்பரிய மரபுகளையும்,வரலாறுகளையும் தன்னகத்தே தாங்கி வந்த நாடாகும்.நம் நாட்டின் பாரம்பரியத்தையும் வரலாறுகளையும் உலக நாடுகள் அனைத்தும் என்றுமே வியந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

அப்படிப்பட்ட இந்தியநாடு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்து ஜனநாயகம் உருப்பெற்று மக்களாட்சியை ஏற்படுத்தி நவீன இந்தியாவை உருவாக்க சட்ட தந்தை அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை நமக்கு வடிவமைத்து தந்தார்.அந்த சட்டத்தில் இந்திய பாரம்பரிய மரபுகள் ,வரலாறுகள்,இந்திய இறையாமை போன்ற மான்புகள் அனுபிசகாமல் செதுக்கி நமக்கு கொடையாக அளித்தார்.

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இனம்,மொழி,நிறம்,சாதி என பல்வேறு வகையான இனக்குழுக்கள் அடங்கிய இந்தியாவிற்கு மக்களாட்சியே சிறந்தது என கூட்டாட்சி தத்துவத்தை ஏற்படுத்தி சுதந்திர இந்தியாவில் அனைத்து மக்களும் சமம் என சமத்துவத்தையும்,சகோதரத்துவத்தையும் இந்திய நாடெங்கும் ஓங்கி வளரச்செய்ய விதை போட்ட வித்தகர் ஆவார்.

நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை பார்த்து உலக நாடுகள் எல்லாம் அம்பேத்கரை பாராட்டி ,புகழ்ந்து உலகமெங்கும் அம்பேத்கரின் சிலைகள் ,புகைப்படங்கள் வைத்து அவர் புகழ் பாடி வருகிறார்கள் மேலும் உலகிலேயே மிகச்சிறந்த மனிதர் அம்பேத்கர் என கொண்டாடி வருகிறார்கள்.

இந்த சூழலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உயர்நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி அண்ணல் அம்பேத்கர் புகைப்படங்கள் மற்றும் சிலைகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற பதிவாளர் அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


சட்ட தந்தை அம்பேத்கர் இந்திய ஜனநாயகம் வலுப்பெறவும்,குடியரசு ஆட்சி சிறப்படையும் ஜனநாயகத்தின் மூன்று தூண்களான சட்டம் இயற்றும் துறை,நிர்வாகத்துறை,சுதந்திரமான நீதித்துறை என கட்டமைத்து இந்திய குடியரசு ஆட்சியை உலக அரங்கில் மிளிரச்செய்தார்.

இவர் சிலைகளையோ,புகைப்படத்தையோ நீதிமன்றங்களில் இருந்து அகற்றுவது நம் கண்ணை நாமே குத்துவதற்கு சமமாகும்.

ஒவ்வொரு இந்தியரும் அம்பேத்கர் வடிவமைத்த சட்டத்தை மீறி எப்படி வாழ முடியாதோ, அதேபோல் அவர் வடிவமைத்த சட்டத்தையும்,அவரின் நற்ப்பெயரையும் பாதுகாப்பதும் நம் கடமையாகும்
சட்டத்தந்தை அம்பேத்கர் நவீன இந்தியாவை உருவாக்க நமக்கு அரசியலமைப்பு சட்டம் தந்த சட்டமேதை உலகமே போற்றி கொண்டாடும் வேளையில் நம் தமிழ்நாட்டில் மட்டும் நீதிமன்றங்களில் அவர் புகைப்படங்களை யும்,சிலைகளையும் அகற்றுவது தர்மப்படி அவரை முற்றிலும் அவமதிக்கும் செயலாகும்.
Law is supermacy சட்டமே அனைத்திலும் உயர்ந்தது எனும் நாட்டின் உயரிய தத்துவத்தை தந்த அண்ணல் அம்பேத்கரின் படங்களை அகற்றுவது நம் மரபுகளை நாமே சிதைப்பதற்கு சமம்.
ஆகையால் உயர்நீதிமன்ற பதிவாளர் அம்பேத்கர் படங்களையும்,சிலையையும் அகற்ற வெளியிட்ட சுற்றறிக்கையை மறுபரிசீலனை செய்து,அகற்றுவது நிறுத்தி நம் நாட்டின் ஜனநாயகத்தையும்,இறையான்யையும்,மான்பையும் காப்பாற்ற வேண்டும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.அறிக்கை வெளியிடும் போது அவருடன் தேவேந்திர பேனாக்கள் இயக்க நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *