என்.எல்.சிக்கு எதிராக நெய்வேலியில் போராட்டத்தில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்ததை கண்டித்து, போச்சம்பள்ளி நான்கு முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்ட, பாட்டாளி மக்கள் கட்சியினர் 30-க்கும் மேற்பட்டோரை போச்சம்பள்ளிகாவல் துறையினர் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் விவசாயின் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணியில் நெய்வேலி நிர்வாகம் கடந்த மூன்று நாட்களாக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விளை நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள விவசாயிகள் பல போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

அப்பொழுது பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் உட்பட நிர்வாகிகள் பலரை போலீசார் கைது செய்துள்ளனர் இதைக் கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி நான்கு முனை சந்திப்பில் சாலையில் பாமக பில்லா தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர் அப்பொழுது பாமக தலைவர் அன்புமணி ராமதாசை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்து கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் இடுபட்டனர் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 30 மேற்பட்ட பாமகவினர் போச்சம்பள்ளி போலீசார் கைது செய்து வேன் மூலம் கொண்டு சென்று தனியார் திருமணம் மண்டபத்தில் அடைத்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *