நாமக்கல்

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் நாமக்கல் மாவட்ட குழு சார்பாக நாமக்கல் மாவட்ட இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பு நான்காவது அகில இந்திய மாநாடு வரும் 2023 செப்டம்பர் 19 20 21 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் நாமக்கலில் நடத்துவது குறித்து அதற்கான வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் இன்று நாமக்கல் மாவட்ட இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் உள்ள கே கருணாகரன் நினைவரங்கத்தில் மாலை நடைபெற்றது

இந்த நிகழ்ச்சிக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மத்திய குழு ஏ ரங்கசாமி தலைமை வகித்தார்

அனைவரையும் நாமக்கல் அமைப்புக்கு பொறுப்பாளர் நா.வேலுசாமி வரவேற்று பேசினார்

இன்று நடைபெற்ற இந்த வரவேற்பு குழு அமைப்பு கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பெ.சண்முகம் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு என் பாண்டி தமிழக மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி .டெல்லி பாபு, மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.பெருமாள், தமிழ்நாடு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.தங்கராஜ் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்

இறுதியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் உடைய மாநில தலைவர் பெ சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்

அப்போது வரும் செப்டம்பர் மாதம் 19 ,20 ,21 ஆகிய மூன்று நாட்களில் அகில இந்திய அளவிலான    நான்காவது மாநாடு நாமக்கலில் நடைபெற இருப்பதாகவும் 

அதில் இந்தியா முழுவதிலிருந்தும் 18 மாநிலங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் அதில் வந்து கலந்து கொள்ள இருப்பதாகவும்

இந்த மாநாட்டில் அகில இந்திய அளவில் உள்ள தலைவர்களும் குறிப்பாக கேரளா மாநில முதலமைச்சர் பிரனாய் விஜயன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருப்பதாகவும்

குறிப்பாக தற்போது பாரதிய ஜனதா கட்சி மலைவாழ் மக்களுக்கும் , விவசாயிகளுக்கும் எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவர்களின் இன சான்றிதழ் வழங்குவதில் ஏற்படுத்தி வரும் குளறுபடிகளை தடுக்கும் நோக்கத்திலும் அகில இந்திய அளவில் மலைவாழ் மக்களுக்கு எதிராக இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு தீர்மானங்களை இந்த மாநாட்டில் நிறைவேற்று இருப்பதாகவும் பெ. சண்முகம் அப்போது தெரிவித்தார்

இறுதியில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் அசோசியேசன் செயலாளர் கே.சின்னசாமி நன்றி உரையாற்றினார்..

முன்னதாக மாநாடு சம்பந்தமாக அலுவலக கவனிப்பதற்காக மாநாட்டு அலுவலக அறை ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *