திருக்கோவலூர்

கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் சார்பாக, திருக்கோவலூர் அங்கவை சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 50 பேருக்கு,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கல்வெட்டு சிற்றெழுத்தர்கள், சி. ஜோதி, மா. ஞானப்பிரகாசம், கே. மகாராசன் ஆகியோர்கள், கல்வெட்டுகளைச் சுத்தம் செய்து, முறையாக படியெடுப்பது எப்படி என்று பயிற்சி அளித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் பாவலர், சிங்கார உதியன், திருக்கோவலூர் பாட்டு என்று கூறப்படும் கல்வெட்டில் சொல்லப்பட்டிருந்த
1, அருமொழி என்கிற ராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்திகள்,
2, வானமாதேவியின் பிறப்பு,3,மலையர்குல தெய்வம் பற்றி,
4, கபிலர் வடக்கிருந்து உயிர் நீத்த கபிலக்கல் குறித்தும், 5, கோவல் வீரட்டானத்தின் பெருமைகள்,6, இக்கோயிலுக்கு யார் யார் தானம் வழங்கினார்கள் என்பது குறித்தும், தானமாக அளிக்கப்பட்ட நிலத்தின் பரப்பும், ஊரும், அதன் வருவாயில் செலவு செய்யவேண்டிய விவரங்களையும்,7 பாட்டுடைத் தலைவனின் சிறப்பியல் புகளையும்,8, இராஜராஜ சோழனின் அவையில் அறங்களைக் கூறும் அதிகாரியாகப் பதவி வகித்த வீதிவிடங்கன் கம்பன் என்பவர்தான் இக்கல்வெட்டினை அமைத்தவர் என்ற செய்திகளையும் பட்டியலிட்டு விளக்கிப் பேசினார்.

பயிற்சிக்கு நல்நூலகர் மு. அன்பழகன் தலைமை வகித்தார். பேராசிரியர் மு. ரவிச்சந்திரன், எழுத்தாளர்கள் அருள்நாதன் தங்கராசு, கவிநிலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வரலாற்று பட்டதாரி ஆசிரியர்கள் மா. அல்லி, ஜே. மரிய சகாயமெஜிலா, ஆர்.சொர்ண காமாட்சி ஆகியோர் மாணவிளை வழி நடத்தினர்.

கள்ளக்குறிச்சி வரலாற்று ஆய்வு நடுவத்தின் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *