ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

இந்தியா 2047 என்ற தலைப்பில் இளைஞர்கள் கலந்துரையாடல் கருத்தரங்கு இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் நேரு யுவகேந்திரா திருவாரூர் மற்றும் நாம்கோ தொண்டு நிறுவனம் இணைந்து இந்தியா@2047 என்ற தலைப்பில் இளையோர்கள் கலந்துரையாடல் மற்றும் மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சி ஆகஸ்ட் 18 அன்று திரு.வி.க அரசு கலை கல்லூரியில் முதல்வர் ராஜாராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நாம்கோ தொண்டு நிறுவன இயக்குனர் ஜீவானந்தம் வரவேற்புரை வழங்கினார்.
2047 இல் இந்தியா இளையோர் கருத்தரங்கினை வருவாய் கோட்ட அலுவலர் சங்கீதா அவர்கள் துவங்கி வைத்து, இன்றைய இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான பங்காற்ற வேண்டிய கடமை உள்ளது.

இளைஞர்கள் தன் பாதையில் இருந்து ஒரு பொழுதும் மாறாத தேசபக்தியுடன் தன் வளர்ச்சி, தன் குடும்ப வளர்ச்சி மற்றும் நாட்டின் வளர்ச்சி என்ற கருத்துடன் முன்னேற பாடுபட வேண்டும் என கருத்துரை வழங்கினார். இளையோர் கருத்தரங்கத்தின் நோக்கம்
பற்றி நேரு யுவ கேந்திரா திட்ட அலுவலர் பாலகிருஷ்ணன் விளக்க உரை வழங்கினார்.

உறுதிமொழிக்கு பின் திருவாரூர் வட்டாட்சியர் நக்கீரன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சந்திரசேகரன், தமிழ் ஆசிரியர் தமிழ்காவலன், திருக்கோஷ்டியூர் பயிற்றுநர் மணிகண்டன், தலைமை ஆசிரியர் முத்து ஜெகதீசன், நூலகர் ஆசை தம்பி, திரு.வி.க அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் அண்ணாதுரை பாரத் சண்முகவடிவு, இளங்கோவன் அகிலா, அறிவழகன் மற்றும் பலர் நம் நாட்டின் வளர்ச்சி, காலனித்துவ மன நிலமையின் தடையத்தை நீக்குதல், நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் பெருமைகளை
உணர்தல், நமது ஒற்றுமையின் பலம், குடிமக்களின் கடமைகளை நேர்மையுடன் நிறைவேற்றுதல் போன்ற பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள். 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் தேசிய இளையோர் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர் நிகழ்வின் இறுதியாக பேராசிரியர் பூங்கொடி நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *